உத்தரப் பிரதேசத்தில் உள்ள அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில்(ஏஎம்யு) மாணவர் சங்கத்தினர் நடத்தும் நிகழ்ச்சியில், அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின்  ஐதராபாத் எம்.பி ஒவைசிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இதையடுத்து இந்நிகழ்ச்சி பற்றி செய்தி  சேகரிக்க  டி.வி.க்குழுவினர் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்துக்கு சென்றனர்.

ஒவைசியை  பல்கலைக்கழக வளாகத்துக்குள் அனுமதிக்க கூடாது என ஒரு பிரிவினரும்,  அனுமதிக்க வேண்டும் என ஒரு பிரிவினரும் கோரி பல்கலைக்கழகத்தின் நுழைவு வாயில் அருகே போராட்டம் நடத்தினர். அப்போது மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் கைகலப்பும் ஏற்பட்டது. கேமிராக்கள் உடைக்கப்பட்டன. அப்போது மாணவர் சங்கத்தின் தலைவர்  சல்ன் இம்தியாஸ் மற்றும் துணைத் தலைவர் உசைபா அமீர் ஆகியோர் இந்திய தேசத்தை எதிர்த்தும், பாகிஸ்தானை ஆதரித்தும் கோஷமிட்டனர்.

இந்த நிலையில் பாரதிய ஜனதாவின் யுவ மோர்ச்சாவைச் சேர்ந்த முகேஷ் லோதி என்பவர் கொடுத்த புகாரையடுத்து பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில், அப்பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் மொகமது சல்மான் இம்தியாஸ், மற்றும் துணைத் தலைவர் ஹுசைபா ஆமிர் உள்ளிட்ட 14 பேர் மீது, இந்திய தண்டனைச் சட்டம் 124-ஏ பிரிவில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாது இருக்க, பல்கலைக்கழகத்தைச் சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share