Amazon Great Indian Sale - 2019

விருந்தாளிகள் எந்தவொரு அன்பளிப்பையும் கொண்டு வர வேண்டாம் என கேட்டுக்கொள்ளும் திருமண அழைப்பிதழ்களைக் காண்பது இன்றைய நாட்களில் சாதாரணமாக இருக்கிறது. புதிதாகத் திருமணமான தம்பதிகளுக்கு விலையுயர்ந்த பரிசுகளை வழங்குவதற்கு பதிலாக இல்லாதவர்களுக்கு தொண்டு செய்யவும் கேட்டுக்கொள்கிறார்கள்.

ஹைதராபாத்தில் உள்ள 27 வயதான யந்தே முகேஷ் ராவ் என்பவர் தனது திருமண அழைப்பிதழ்கள் மூலம் விசித்திரமான வேண்டுகோளை விடுத்துள்ளார். தனது திருமணத்திற்கு எந்தவித அன்பளிப்புகளையும் வழங்கவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளும் அவர், வரவிருக்கும் லோக் சபா தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடிக்கே வாக்களிக்கப்பேன் என சத்தியம் செய்யுங்கள் என்று கேட்டுக்கொள்கிறார்.

Advertisement Amazon Great Indian Sale - 2019

தெலுங்கானா மாநில மின் உற்பத்தி நிறுவனத்தில் (டி.எஸ். ஜென்கோ) உதவி பொறியாளராக பணிபுரியும் ராவ் பிப்ரவரி 21 அன்று திருமணம் செய்து கொள்கிறார்.

ஷம்ஷாபாத்தில் வசிக்கும் ராவ் தனது திருமண அழைப்பிதழில் ஒரு செய்தியை வெளியிட்ட்டுள்ளார்: “2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் மோடிக்கு நீங்கள் அளிக்கும் வாக்கு தான், எங்களுக்காக நீங்கள் அளிக்கும் திருமண பரிசு”, என்று அச்சடித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் தீவிர ரசிகரான ராவ், “அன்றாடம் நாம் அனைவரும் மிகவும் பிஸியாக இருக்கிறோம். நாட்டுக்காக ஏதேனும் செய்வது என்பது கடினமாக இருக்கிறது. நாட்டிற்காக ஏதாவது செய்ய வேண்டும். குறைந்தபட்சம் நாம் செய்ய வேண்டியது என்னவென்றால், நாட்டை வலுப்படுத்த அயராது பாடுபடும் மோடியை ஆதரிப்பது தான். எனது திருமண அழைப்பிதழில் மோடிக்கு வாக்களிக்க வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன்,” என்று அவர் கூறினார்.

மோடிக்கு பிரச்சாரம் செய்வதற்கு திருமண அழைப்பிதழை பயன்படுத்துவதைப் பலரும் விரும்பவில்லை என்று அவருக்கு தெரிந்துள்ளது. “மோடியை எதிர்க்கும் பலர் உள்ளனர் என்று எனக்கு தெரியும். ஆனால் ஒவ்வொரு சனிக்கிழமையும் ஸ்வச் பாரத் (தூய்மை இந்தியா) திட்டத்தில் மூன்று மணிநேரங்கள் என் அலுவலகத்தில் செலவிடுகிறேன். இது போன்ற முயற்சிகளை நான் ஆதரிக்கிறேன்,” என்று அவர் கூறினார்.

ராவ் தனது குடும்ப உறுப்பினர்களிடமிருந்து எதிர்ப்பை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஆனால் அவர் பிடிவாதமாக இருந்தார். “நான் அவர்களை சமாதான படுத்தினேன். நரேந்திர மோடியின் வேலைக்கு அங்கீகாரம் அளிப்பதும், மறு தேர்தலுக்கு ஆதரவைக் கேட்டபதும் எனது வழி”, என்று அவர் கூறினார்.

சமீபத்தில் மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ராவ் தெலுங்கானா ராஷ்ட்ரா சமிதிக்கு ஆதரவு கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share