அவிநாசி – அத்திக்கடவு திட்டத்துக்கு தமிழக அரசு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதை, போராட்டக்குழு வரவேற்று உள்ளது. இது தொடர்பாக அவிநாசி – அத்திக்கடவு போராட்டக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியம் கூறியிருப்பதாவது, இத்திட்டத்தின் மூலம் கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் உள்ள மூன்று லட்சத்திற்கு மேற்பட்ட விவசாயிகள் பயன்பெறுவார்கள். மேலும் நிலத்தடி நீர் உயரும், கால்நடை தேவையான உணவுகள் கிடைக்கும். இத்திட்டத்தின் மூலம் 3 மாவட்டங்களைச் சேர்ந்த 843 ஊராட்சிகளில் உள்ள 74 குளங்கள், 971 குட்டைகளில் நீர் நிரப்பப்பட்டுவந்தால் சுமார் 50 லட்சம் மக்கள் பயனடைவார்கள். முன்னதாக இத்திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி அவிநாசி – அத்திக்கடவு போராட்டக் குழு சார்பில் 2016ஆம் பிப்ரவரியில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில் உண்ணாவிரதம் இருந்த 24 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

இந்நிலையில் 2016 பிப்ரவரி 16ம் தேதி நடைபெற்ற இடைக்கால பட்ஜெட் கூட்டத்தில், சட்டமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானமும், கவன ஈர்ப்பு தீர்மானமும் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்தன.இதனையடுத்து, அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் அரசிதழில் வெளியிட்டார். மேலும் 2017-2018ஆம் ஆண்டு ₹250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது இத்திட்டத்தை நிறைவேற்ற பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்து அறிவித்த தமிழக முதல்வருக்கு அத்திக்கடவு- அவிநாசி போராட்டக்குழு சார்பில் நன்றி தெரிவிப்பதாக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Share