காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முன்னணி ஆட்சி கடந்த 2004 ம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டுவரை 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக நடைபெற்றது. இந்த ஆண்டுகளில் மத்திய உள்துறை அமைச்சகம் முன்னெச்சரிக்கையுடனும், திறமையுடனும், வலுவாகவும் செயல்படாத காரணத்தால்  நக்சலைட் பயங்கரவாதம், பாதுகாப்பு படையினர் கொலை, குடிமக்கள் கொல்லப்படுதல் ஆகியவை எப்போதும் இல்லாத வகையில் மிக அதிக அளவில் நடைபெற்றது. ஆனால் மோடி சர்காரின் உள்துறை அமைச்சகம் எடுத்த வலுவான, புத்திசாலித்தனமான நடவடிக்கைகளால் பெருமளவு பயங்கரவாத சம்பவங்கள் குறைந்து விட்டதை பின்வரும் புள்ளிவிபர தகவல்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம். மேற்படி காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்ற 10 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்ற நக்சலைட் பயங்கரவாத சம்பவங்கள் சராசரியாக 1144 ஆகும். ஆனால் மோடி சர்க்கார் பதவி ஏற்ற 2014 ஆம் ஆண்டு முதல் 2018 வரை நடைபெற்ற நக்சலைட் பயங்கரவாத சம்பவங்கள் ஆண்டுக்கு 488 மட்டுமே. அதுவும் மிகப்பெரிய சம்பவங்கள் இல்லை. சிறிய சம்பவங்களே ஆகும். இதற்கு காரணம் மத்திய உள்துறை எடுத்துவரும் வலிமையான நடவடிக்கைகளே. மேலும் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் நக்சல்பாரிகளுக்கு வெளியிலிருந்து வரும் பணம், ஆயுதங்கள் குறைந்துவிட்டது.

மேலும் அவர்கள் குவித்து வைத்திருந்த கருப்பு பணமும் செல்லாததாகிவிட்டதால் அவர்களின் பலம் முழுமையாக ஒடுக்கப்பட்டது. 
அதேபோல மேற்படி காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்ற 10 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் பயங்கரவாதிகளின் தாக்குதலால் ஒரு ஆண்டுக்கு  சராசரியாக 51 பேர்  கொல்லப்பட்டுள்ளனர்.  அதே சமயம் மோடி சர்காரின் கடந்த 4 ஆண்டுகளில் ஆண்டுக்கு சராசரியாக கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 22  பேர் ஆகும். இதற்கு காரணம் பொது மக்கள் உதவியுடன் பயங்கரவாதிகளையும், அவர்களின் திட்டங்களையும் அறிந்து அவர்களை இரும்புக்கரம் கொண்டு மோடி சர்கார் ஒடுக்கியது. மேலும் ஒரு பாதுகாப்பு படைவீரர் கொல்லப்பட்டால் பதிலுக்கு 10 எதிரிகளின் தலைகள் வாங்கப்பட்டன. குறிப்பாக துல்லிய ராணுவ நடவடிக்கைக்குப் பின் எல்லை தாண்டி வரும் பயங்கரவாதிகளின் நடவடிக்கையும், காஷ்மீர் தீவிரவாதிகளின் நடவடிக்கையும் மிக கடுமையாக ஓடுக்கப்பட்டதே ஆகும். 
அதேபோல வன்முறை சம்பவங்களில் பொதுமக்கள் கொல்லப்படும் எண்ணிக்கையும் காங்கிரஸ் அரசுடன் ஒப்பிடும்பொழுது மோடி சர்காரில் மிக, மிக குறைந்துவிட்டது.

காங்கிரஸ் ஆட்சியில் ஒவ்வொரு ஆண்டிலும்  சராசரியாக வன்முறை சம்பவங்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 271 ஆகும். ஆனால் மோடிசர்காரின் கடந்த 4 ஆண்டுகளில் உயிரிழந்தவர்களின் ஆண்டு சராசரி 73 மட்டுமே ஆகும். இந்த புள்ளி விவரங்களில் இருந்து பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியின் உள்நாட்டு சட்ட ஒழுங்கு மற்றும் எல்லை பாதுகாப்பு குறித்த நம்பகத்தன்மையை நாம் புரிந்து கொள்ளலாம். பின்வரும் புள்ளிவிபர வரை படத்தின் மூலம் காங்கிரஸ் மற்றும் மோடி சர்க்கார் ஆட்சியில் நடைபெற்ற ஒவ்வொரு ஆண்டு சம்பவங்களையும் அறியலாம்.     

Source : MHA/ The Pulse 2019
Share