உத்தர பிரதேச காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் இம்ரான் மசூத். இவர் முன்னாள் காங்கிரஸ் எம் எல் ஏ. சென்ற 2014-ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது பொதுக் கூட்டத்தில் பேசும்போது மோடியை தாக்கிப் பேசினார். அப்போது மோடியை கண்டதுண்டமாக வெட்டிக் கொலை செய்வேன் என தாலிபான் பயங்கரவாதி போல பேசினார். அப்போதே அவருடைய பேச்சுக்கு பா.ஜ.க உட்பட கட்சிகள் பலத்த கண்டனம் தெரிவித்தன. அதிலிருந்து மாநில அளவில் காங்கிரசில் பிரபலமாகிவிட்டார். 

இந்த நிலையில், நேற்று பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி பங்கேற்ற பேரணி லக்னோவில் நடைபெற்றது. அப்போது பேரணியில் அலங்கரிக்கப்பட்ட வாகனம் ஒன்றில் பிரியங்கா காந்தி அமர வைக்கப்பட்டு அழைத்து வரப்பட்டார். அவருடன் முன் வரிசையில் இம்ரான் மசூதும் நெருக்கமாக அமர்ந்திருந்ததை பார்த்த பலருக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. காங்கிரஸ் கட்சியின் மிக முக்கிய பிரமுகர்களான ஜோதிர்லால் சிந்தியா மற்றும் பி.எல் பூனியா ஆகியோருக்கு சமமாக மிகப்பெரிய பொறுப்பு எதையும் வகிக்காத இம்ரான் மசூத் பிரியங்காவுடன் அமர வைக்கப்பட்டிருந்தது பலருக்கு வியப்பையும் ஏற்படுத்தியது. 

மோடியை கண்டதுண்டமாக வெட்டிக் கொலை செய்வேன் எனக்கூறிய ஒரு கொலை வெறி பிடித்த ரவுடியை பக்கத்தில் வைத்துக் கொள்ளும் அளவுக்கு காந்தி குடும்பத்துக்கு மோடி மீது அப்படி என்னதான் எரிச்சல். சோனியா காந்தி செய்த இராணுவ கொள்முதல் ஊழல்கள், பல்வேறு ஊழல்களிலும் வெளிநாடுகளில் பணம் பதுக்கியதிலும் ராகுல் காந்தியின் கைவரிசை, கணவர் ராபர்ட் வதேரா செய்த நில மோசடிகள், போலி நிறுவனங்கள் நடத்தியது போன்றவை தற்போது வெளிச்சத்துக்கு  வந்து கொண்டு இருப்பதால் கடும் எரிச்சல் அடைந்த காந்தி குடும்பம் மோடியின் மீதுள்ள தங்கள் வெறியை காட்டிக் கொள்வதற்காகவே மசூதுக்கு முக்கியத்துவம் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனாலும் இதை பார்த்த பொது மக்கள் முகம் சுளித்ததாக கூறப்படுகிறது.

Share