மக்களவைத் தேர்தல் நெருங்குவதால், மெகா பிரச்சாரம் ஒன்றை பா.ஜ.க தற்போது முன்னெடுத்துள்ளது. “எனது குடும்பம், பாஜக குடும்பம்” எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த பிரச்சாரத்தை, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள தனது இல்லத்தில் அகில இந்திய பாஜக தலைவர் அமித்ஷா தொடங்கி வைத்தார்.  தனது இல்லத்தில் கட்சிக் கொடியை பறக்க விட்டதுடன், கட்சி ஸ்டிக்கரையும் ஒட்டினார்.  

இந்தப் பிரச்சாரத்தின் படி, நாடு முழுவதும் 5 கோடி வீடுகளில் பா.ஜ.க கொடி பறக்க விடப்படும். வீடுகளில் கட்சி ஸ்டிக்கர்களும் ஒட்டப்படும். பா.ஜ.க-வை விரும்புவோரும் தங்கள் வீடுகளில் இதுபோல் செய்யுமாறு அமித்ஷா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னையில் டாக்டர்.தமிழிசை தனது இல்லத்தில் பா.ஜ.க கொடியை பறக்க விட்டார்.


கோவையில் பா.ஜ.க தேசிய பொதுச்செயலாளர் திரு.முரளீதர் ராவ் பா.ஜ.க கொடியை பறக்க விட்டார். அச்சமயத்தில் கயிறு வாரிய தலைவர் திரு.சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களும் உடனிருந்தார்.

Share