நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில், இந்திய அணுசக்திக் கழகம் சார்பில்ரஷ்ய உதவியுடன் இரண்டுஅணு உலைகள் அமைக்கப்பட்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில் 3-வது மற்றும் 4-வது அணுஉலைகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இரண்டு அணு உலைகளின் கட்டுமானப் பணி திட்டமிட்டபடி நடைபெற்று வருகிறது.

அணு உலை வெப்பம் மற்றும் அழுத்தத்தை அளவிடும்கருவி, அணுக் கழிவுகளை கொண்டு செல்லும் குழாய்கள் ஆகியவை ரஷ்யாவிலிருந்து வந்து சேர்ந்துள்ளதாகவும், உபகரணங்களைப் பொருத்தும் பணி விரைவில் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளனர். 15 விழுக்காடு முதல் 20 விழுக்காடு பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், முதலிரண்டு அணு உலைகளுக்கான பெரும்பாலான பொருட்கள் ரஷ்யாவில்இருந்து வந்த நிலையில், தற்போது அமைக்கப் பட்டுள்ள அணு உலைகளுக்கு உள்நாட்டு உதிரிபாகங்கள் பெருமளவில் பயன்படுத்தப்படுவதாகவும் அதிகாரி தெரிவித்தார்.

இதனிடையே வழக்கமான பராமரிப்புப் பணிகளுக்காக, கடந்த நவம்பரில் மூடப்பட்ட முதலாவது அணு உலை வரும் 20-ஆம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 2-வது அணுஉலையில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக அந்த உலையில் இருந்தும்மின் உற்பத்தி நிறுத்தப் பட்டுள்ளது. இந்தப் பழுது ஓரிரு நாட்களில் சரிசெய் யப்படும் என்று அணுமின்நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Share