உலகப் பொருளாதாரத்தில் 6-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளதாகவும், 2030-ம் ஆண்டுக்குள் 2-வது இடத்திற்கு முன்னேறும்என்றும் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

13-வது சர்வதேச எண்ணெய் மற்றும் எரிவாயு தொடர்பான கருத்தரங்கு மற்றும் கண்காட்சி நொய்டாவில் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் பெட்ரோலிய எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவன அதிகாரிகள் கலந்துக் கொண்டனர்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, உலக பொருளாதாரத்தில் 6-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உள்ளதாக பெருமிதம் தெரிவித்தார். 2030-ம் ஆண்டுக்குள் பொருளாதாரத்தில் 2-வது இடத்திற்கு இந்தியா முன்னேறும் என்று கூறிய பிரதமர், உலக பொருளாதாரத்தில் இந்திய முக்கிய பங்கு வகிக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

Share