மத்திய அரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி, விவசாயிகளுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவி அளிக்கும் திட்டத்தை செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.நாடு முழுவதும் இரண்டு ஹெக்டேர் வரை நிலம் உள்ள சிறு-குறு விவசாயிகளுக்கு மூன்று தவணைகளாக நிதியுதவி அளிக்கப்படும் என மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் அறிவித்தார்.

கடந்த டிசம்பர் மாதத்தை கணக்கிட்டு இத்திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார். இத்திட்டத்தின்கீழ் தமிழகத்தில் 73 லட்சத்து 43 ஆயிரம் விவசாயிகள் பயன்பெறுவார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தை செயல்படுத்த 13 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. 

வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் ஒருங்கிணைப்பு அதிகாரியாக செயல்படுவார்.தலைமைச் செயலக ஒருங்கிணைப்பு அதிகாரியாக ககன்தீப் சிங் பேடி நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் மேலும் 11 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

Share