திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் மருத்துவமனையை திறந்து வைக்க பிரதமர் மோடி நேற்று வருகை புரிந்தார். ஆந்திராவில் இருந்து தனி விமானம் மூலமாக கோவை வந்த அவர், பின்னர் ஹெலிகாப்டர் மூலமாக திருப்பூர் வந்து சேர்ந்தார்.

இ.எஸ்.ஐ மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற அவர், பின்னர் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். பிரதமர் மோடி தமிழக வருகை குறித்து அறிவிப்பு வெளியானலே, அன்றைய தினம் முதல் திமுக, மதிமுக போன்ற கட்சிகள் இரவும் பகலும் அயராமல் கண் விழித்து எப்படி எதிர்க்கலாம் என்று திட்டம் தீட்டுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

அதன் வெளிப்பாடு தான் கருப்பு பலூன்களை பறக்க விடுதல், ஹெலிகாப்டர் வரும் பொழுது ராட்சசத பலூன்களை பறக்க விடுதல் போன்ற சித்து விளையாட்டுக்கள் எல்லாம்.

நேற்று பிரதமர் திருப்பூர் வந்ததிற்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக பொதுசெயலாளர் வைகோ ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது காவல் துறையினர் கைது செய்ய வந்த பொழுது கட்சி தொண்டர் ஒருவரை ட்ரான்ஸ்பார்மர் மீது ஏற விட்டு வேடிக்கை கட்டினார். அதனையும் மீறி காவல்துறையினர் அருகில் நெருங்கி வந்த பொழுது எனக்காக தொண்டர்கள் உயிரை கூட கொடுப்பார்கள்.

காவல் துறையினர் நமது வாகனத்தில் ஏறினால் நீ செத்த பிறகு தான் ஏற வேண்டும் என்று அருகில் இருந்த தொண்டரிடம் வன்முறையை தூண்டும் வகையில் பேசினார். தனது அரசியல் ஆதாயத்திற்காக சொந்த கட்சி தொண்டரின் உயிரில் விளையாடும் வைகோ போன்ற தலைவர்களின் தலைமையில் ஒரு கட்சி இயங்கினால் அதன் நிலை எப்படி இருக்கும் என்று பலரும் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.

Inputs From:

https://www.maybemaynot.com/blog/vaiko-rude-speech-tirupur

https://tamil.news18.com/news/tamil-nadu/mdmk-leader-vaiko-criticized-pm-modi-108247.html

Share