Pic Credits - ToI

ஆந்திரா, தமிழகம் சுற்றுப்பயணங்களை முடித்து விட்டு, பிரதமர் மோடி, கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது, நாட்டின் வரலாற்றில் முதன்முறையாக, ரூ. 5 லட்சம் வரை வருமான வரிவிலக்கு அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இது மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும் என்பதில் எவ்வித மாற்றமுமில்லை. இந்த முறை, எனது நண்பர்களான இளைஞர்களுக்கு மிகுந்த பயனளிக்கும். ஹூப்ளி – தார்வாத் பகுதியில் உள்ள இளைஞர்கள், பெரும்பாலும் இந்த வருமான பிரிவினராகவே அதிகளவில் இருப்பதால், அவர்களுக்கு இத்திட்டம் பேரூதவியாக இருக்கும்.

எதிர்க்கட்சிகள், ஒவ்வொரு தேர்தலின் போதும் ஒரே பொய்யை, பல தலைமுறைகளாக தொடர்ந்து கூறிவருகின்றன. விவசாயிகளின் கடனை ரத்து செய்வது என்பதே அது. இது அவர்கள் தொடர்ந்து கூறிவரும் பச்சை்ப்பொய். இதில் நிதர்சனம் யாதெனில், 100 விவசாயிகளில், 25 முதல் 30 விவசாயிகளின் கடன் மட்டுமே தள்ளுபடி செய்யப்படுகிறது. விவசாயிகளுக்கு சொற்ப அளவிலேயே இதன்மூலம் நன்மை அடைகிறார்கள், எஞ்சிய 70 சதவீத பணம், இடைத்தரகர்களாக செயல்படுவர்களே பதுக்கிவிடுவதாக பிரதமர் மோடி கூறினார்.

Share