1. திருப்பூர் பொதுக்கூட்டத்திற்கு வந்த  பிரதமர் மோடி  திருப்பூர், திருச்சி மற்றும் சென்னை மாநகரங்களில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்தார்.
  2. திருப்பூரில் 7.46 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு பெருமாநல்லூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். சுமார் ஒரு லட்சத்து 22 ஆயிரம் தொழிலாளர்கள் பயன் பெறும் வகையில் இந்த மருத்துவமனை அமையவுள்ளது. அவசர சிகிச்சை பிரிவு, புறநோயாளிகள் பிரிவு, ஆய்வகம் மற்றும் நவீன கருவிகள் எனப்பல வசதிகள் இந்த மருத்துவமனையில் இடம்பெற உள்ளன.
  3. இதேபோல் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள சென்னை கே.கே நகர் ESIC மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மேலும் புதிதாக நூறு இளநிலை மருத்துப் படிப்புகளுக்கான இடங்களும், 14 முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களும் அமையவுள்ளன.
  4. சென்னை எண்ணூரில் ரூ.393 கோடி செலவில் தானியங்கி கச்சா எண்ணெய் சேகரிப்பு மையத்தை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி
  5. துறைமுகத்திலிருந்து மணலியில் உள்ள சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேசனுக்கு குழாய் மூலம் கச்சா எண்ணெய் எடுத்துச் செல்வதற்கான திட்டத்தையும் நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
  6. இதேபோல் சென்னை பன்னாட்டு விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தை நவீனமயமாக்கும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
  7. திருச்சி சர்வதேச விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டிடம் கட்டுவதற்கும் அடிக்கல் நாட்டப்பட்டது. 

Share