பிரதமர் மோடி மற்றும் முதல்வர் பழனிச்சாமியால் நேற்று திருப்பூரில் காணொலி காட்சி மூலம்  சென்ட்ரல் – வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் சேவையை துவக்கி வைக்கப்பட்டதும், சென்னை சென்ட்ரலில் இருந்து, வண்ணாரப்பேட்டைக்கு சென்ற முதல் மெட்ரோ ரயிலில் மத்திய அமைச்சர் அம்ரிந்தர் சிங், தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், எம்.சி.சம்பத் ஆகியோர் பயணம் செய்தனர்.

இந்த புதிய மெட்ரோ ரயில் சேவைக்கு  வடசென்னை மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மேலும் விமான நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு செல்ல வேண்டுமானால் மிகுந்த சிரமம் இருந்ததாகவும், இந்த புதிய மெட்ரோ ரயில் பாதையால் தங்களின்  பயண நேரம் வெகுவாக குறைவதாக மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Share