வங்கி விதிகளை மீறியதற்காக பாரத ஸ்டேட் வங்கிக்கு (எஸ்.பி.ஐ) ₹1 கோடியை அபராதமாக ரிசர்வ் வங்கி விதித்துள்ளது.

1949-ம் ஆண்டைய வங்கி விதிமுறைகள் 47 ஏ பிரிவின் படி, வங்கியிடமிருந்து கடன் பெற்றவர் அந்த கடனை எதற்காகப் பெற்றாரோ அதை அந்தப் பணிக்கு மட்டுமே பயன்படுத்துகிறாரா என்பதை கடன் அளித்த வங்கி கண்காணிக்க வேண்டும். அவ்விதம் கண்காணிக்கத் தவறினால் ₹1 கோடி வரை அபராதம் விதிக்க இந்தச் சட்ட விதி அனுமதிக்கிறது. அந்த வகையில் இந்த அபராதத் தொகை எஸ்பிஐ க்கு விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பங்குச் சந்தைக்கு அனுப்பிய கடிதத்தில் தங்கள் வங்கிக்கு விதிக்கப்பட்ட அபராத விவகாரம் குறித்து வங்கி தெரிவித்துள்ளது.

Share