காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் மீது வீர சாவர்க்கரின் பேரன் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அண்மையில் டெல்லியில் நடந்த நிகழ்ச்சியொன்றில பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, வீர சாவர்க்கரை ஒரு கோழை எனக் கூறி விமர்சனம் செய்திருந்தார். ராகுல் காந்தியின் இந்த பேச்சுக்கு சாவர்க்கர் ஆதரவாளர்களிடையே கடும்  எதிர்ப்புகள் எழுந்தன.

இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக ராகுல் காந்தி மீது சாவர்க்கரின் பேரனான ரஞ்சீத் சாவர்க்கர் மும்பை சிவாஜி பூங்கா காவல் நிலையில் புகார் அளித்துள்ளார். வீர சாவர்க்கரின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் ராகுல் காந்தி செயல்பட்டதால் இந்த புகாரை அளித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Share