மருத்துவ சிகிச்சைக்காக சில வாரங்களுக்கு முன்னர், அருண் ஜெட்லி அமெரிக்கா சென்றார். இதனையடுத்து அவர் வகித்து வந்த நிதி அமைச்சக பொறுப்பு, தற்காலிகமாக ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலிடம் வழங்கப்பட்டது. அவரும் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 

மத்திய அமைச்சர் என்ற அந்தஸ்தில் தொடர்ந்து பதவியில் இருக்கும் அவர் சிகிச்சை முடிந்த பின், சில நாட்கள் அமெரிக்காவிலேயே ஓய்வெடுத்தார். என்றாலும் ஜெட்லி, டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் அவ்வப்போது அறிக்கை வெளியிட்டார். தனக்கு பதிலாக பியூஷ் கோயல் தாக்கல் தாக்கல் செய்த பட்ஜெட்டை பாராட்டி பேசினார். சி.பி.ஐ இயக்குனர் விவகாரத்தில் தேவை இல்லாமல் அதை அரசியலாக்கிய எதிர்கட்சிகளை அமெரிக்காவிலிருந்தபடியே டுவிட்டர் மூலம் சாடினார். 

டெல்லியில் நடைபெற்ற சி.என்.பி.சி வணிக தலைமைப் பண்புகளுக்கான விருது வழங்கும் ( CNBC-TV18 India Business Leadership Awards event.) நிகழ்ச்சியில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். சிகிச்சை பெற்ற பிறகு தான் எடுத்துக் கொண்ட ஓய்வு நேரத்தைக் கூட வீணாக்காமல் அங்கிருந்தபடியே தன்னால் இயன்ற அளவுக்கு பணி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஜெட்லி இன்று முக மலர்ச்சியுடன் டெல்லி  திரும்பினார். மீண்டும் தாயகம் திரும்பியது மகிழ்ச்சியாக உள்ளதாக கூறியுள்ளார்.

Share