2019 – 2020 ஆம் ஆண்டுக்கான வரியில்லாத பற்றாக்குறை நிதிநிலை அறிக்கையை துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ளார் . அமைதி, வளம், வளர்ச்சி என்ற அடிப்படையில் தமிழக அரசு செயல்படுவதாக தெரிவித்த பன்னீர்செல்வம், இலவச திட்டங்களுக்கான நிதியையும் ஒதுக்கீடு செய்துள்ளார்.

 இலவச திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு விவரம்:

·         விலையில்லா வெள்ளாடுகள் அல்லது செம்மறியாடுகள் திட்டத்திற்கு 198.75 கோடி.

·         தாலிக்குத் தங்கம், மானிய விலையில் இருசக்கர வாகனம் திட்டம் ரூ. 250 கோடி.

·         இலவச பாடப்புத்தகங்கள், காலணிகள், புத்தகப் பைகள் வழங்க ரூ.1,656.90 கோடி.

·         10, 11, 12 வகுப்பு மாணவர்களுக்கு தொடர்ந்து 5000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படும்.

மாணவர்களின் பயண கட்டண சலுகைக்காக ரூ. 766 கோடி ஒதுக்கீடு.
முதல் தலைமுறை பட்டதாரிகளின் கல்வி கட்டணத்தை திருப்பி அளிக்க ரூ. 460.25 கோடி.

தமிழக பட்ஜெட்டின் இதர முக்கிய அம்சங்கள்:_

·         *விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் கோடிக்கு பயிர்க்கடன் வழங்கப்படும்*

·         *தமிழகத்தில் தனிநபர் வருமானம் ரூ.1,42,267 ஆக உயர்வு*

·         *மக்கள் பங்களிப்புடன் ஏரிகளை புனரமைக்க ரூ.300 கோடி*

·         *தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8.1 சதவீதமாக இருக்கும் என மதிப்பீடு*

·         *புதுமை வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு*

·         *நடப்பாண்டில் வரி வருவாய் 14 சதவீதம் அதிகரிக்கும் என எதிரப்பார்ப்பு*

·         *நடப்பாண்டில் வருவாய் பற்றாக்குறை ரூ.14,315 கோடி*

·         *நகராட்சித்துறை, குடிநீர் வழங்கல் துறைக்கு ரூ.18,700 கோடி ஒதுக்கீடு*

·         *2018-19-ல் தமிழக அரசு வாங்கிய 44,066.82 கோடி*

·         *தமிழக அரசின் கடன் ரூ.3 லட்சத்து 97 ஆயிரத்து 495 கோடியாக உயர்வு*

·         *2019-20-ல் தமிழக அரசு ரூ.43,000 கோடி கடன் வாங்க திட்டம்*

·         *கடந்த ஆண்டை விட தமிழக அரசின் கடன் இந்த ஆண்டு 42 ஆயிரம் கோடி அதிகம்*

·         *சென்னையில் ஆற்றோரம் வசிப்போருக்கு 38,000 வீடுகள் கட்ட திட்டம்*

·         *உலக வங்கி உதவியுடன் 4,647 கோடி ரூபாயில் வீடுகள் கட்டப்படும்*

·         *மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் கடன் ரூ.22,815 கோடி*

·         *அரசின் நிதி பற்றாக்குறை 3 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது*

·         *ராமேஸ்வரத்தில் அப்துல்கலாம் பெயரில் அரசு கலை, அறிவியல் கல்லூரி கட்டப்படும்*

·         *கஜா புயல் நிவாரணமாக ரூ.2,361.41 கோடி வழங்கப்பட்டு்ளது*

·         *ஜெர்மன் வங்கி உதவியுடன் 2,000 பேட்டரி பேருந்துகள் வாங்கி இயக்கப்படும்*

·         *சென்னை, கோயம்புத்தூர், மதுரையில் முதல்கட்டமாக 500 பேருந்துகள்*

·         *சென்னை மெட்ரோ ரயில் மாதவரம் – கோயம்பேடு – சோழிங்கநல்லூர் திட்டத்திற்கு ஜப்பான் நிதியுதவி*

·         *மதுரை மாவட்டம் திருமங்கலத்தை தலைமையாக கொண்டு புதிய வருவாய் கோட்டம்*

·         *கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்ட புதிய மாவட்டம் விரைவில் உருவக்கப்படும்*

·         *ரூ.2,000 கோடியில் சென்னையில் வாகன நிறுத்த மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படும்*

·         *அத்திக்கடவு – அவிநாசி திட்டத்துக்கு ரூ.1000 ஒதுக்கீடு*

·         *ரூ.1,125 கோடியில் தேனி, சேலம், ஈரோட்டில் 250 மெகாவாட் மிதக்கும் சூரிய திட்டம்*

·         *ரூ.2,350 கோடியில் 500 மெகாவாட் கடலாடி, மிக உய்ய சூரிய பூங்கா திட்டம்*

·         *முதியோர் உதவித்தொகை, இலவச வேட்டி, வேலை உள்ளிட்ட சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கு ரூ.3,958 கோடி ஒதுக்கீடு*

·         *ரூ.284 கோடி மதிப்பில் வெள்ளத்தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்*

·         *ஸ்ரீபெரும்புதூர் ஒரத்தூரில் அடையாறு உபநதியில் நீர்த்தேக்கம் அமைக்கப்படும்*

·         *குறிஞ்சிப்பாடி வட்டத்தில் பரவனாற்று படுகை மறு சீரமைக்கப்படும்*

·         *சிதம்பரம் வட்டம் பேரம்பட்டு அருகே கொள்ளிடம் ஆற்றில் வெள்ளத்தடுப்பு நீரொழுங்கி கட்டப்படும்*

·         *பிச்சாவரம் அருகே உப்பனாற்றின் குறுக்கே நீரொழுங்கி அமைக்கப்படும்*

·         *நில ஆதாரங்களை முறையாக திறம்பட பயன்படுத்த மாநில நலப்பயன்பாட்டு கொள்கை வடிவமைக்கப்படும்*

·         *ஒன்றரை லட்சம் குடும்பங்களுக்கு வீட்டு மனை பட்டா*

·         *தேசிய ஊராக வாழ்வாதார திட்டத்துக்கு ரூ.349.4 கோடி ஒதுக்கீடு*

·         *வீட்டு வசதி, நகர்ப்புற மேம்பாட்டுத்துறைக்கு ரூ.6,265.5 கோடி ஒதுக்கீடு*

·         *ஊரக குறுந்தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க  ரூ.172 கோடி ஒதுக்கீடு*

·         *வறுமை ஒழிப்பு திட்டங்களுக்கு மொத்தம் ரூ.1,031.5 கோடி ஒதுக்கீடு*

·         *2019-20-ம் ஆண்டில் சாலை மேம்பாட்டு பணிகளுக்கு ரூ.1,142 கோடி ஒதுக்கீடு*

·         *தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் 7,896-ல் இருந்து 5,198 ஆக குறைப்பு*

·         *தமிழகத்தில் 2,698 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதாக அரசு பட்ஜெட்டில் தகவல்*

·         *2019-20-ம் நிதியாண்டில் விவசாயிகளுக்கு 2,000 சூரிய பம்ப் செட்டுகள் வழகங்ப்படும்*

·         *ரயில்வே மேம்பால பணிகளுக்கு வரும் ஆண்டில் ரூ.726.6 கோடி ஒதுக்கீடு*

·         *2019-20-ம் ஆண்டுகளுக்கு நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள்துறைக்கு ரூ.13,605 கோடி ஒதுக்கீடு*

·         *பள்ளி கல்வித்துறைக்கு 2019-20-ம் ஆண்டில் ரூ.28,757.62 கோடி ஒதுக்கீடு*

·         *தொடக்கநிலை வகுப்புகளில் நிகர மாணவர் சேர்க்கை விகிதம் 99.8 ஆக உயர்வு*

·         *பள்ளி செல்லா குழந்தைகளின் எண்ணிக்கை 33,519 ஆக குறைந்துள்ளது*

·         *இலவச பாடப்புத்தகங்கள், காலணிகள், புத்தகப் பைகள் வழங்க ரூ.1,657 கோடி ஒதுக்கீடு*

·         *நபார்டு உதவியுடன் பள்ளிகளில் வகுப்பறைகள், ஆய்வகங்கள், கழிப்பறைகள் கட்ட ரூ.381 கோடி ஒதுக்கீடு*

·         *ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்திற்க ரூ.2,791 கோடி ஒதுக்கீடு*

·         *முதல் முதல்முறையாக பட்டதாரி மாணவ, மாணவியருக்கு கல்வி கட்டணம் வழங்க ரூ.460 கோடி ஒதுக்கீடு*

·         *சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 9,975 பேர் பணியமர்த்தப்படுவர்*

·         *வேளாண்துறைக்கு ரூ.10,550 கோடி நிதி ஒதுக்கப்பட்டது*

Share