நாளை திருப்பூர் வரும், பிரதமர் மோடி, இ.எஸ்.ஐ., மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா, சென்னை மெட்ரோ ரயில் சேவை துவக்க விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்று, நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.

தமிழக பா.ஜ.க சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “நாளை திருப்பூர் வரும் பாரத பிரதமர் மோடி அவர்கள்,

  1. திருப்பூரில் ESI மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
  2. சென்னை டி.எம்.எஸ் முதல் வண்ணாரப்பேட்டை வரையிலான மெட்ரோ ரயில் சேவையை காணொளி காட்சி மூலம் துவங்கி வைக்கிறார்.
  3. சென்னை விமான நிலையம் மற்றும் திருச்சி விமான நிலையத்தின் விரிவாக்க பணிகளுக்கு காணொளி காட்சி அடிக்கல் நாட்டுகிறார்.
  4. எண்ணூரில் பாரத் பெட்ரோலியம் கார்பரேஷன் நிறுவனத்தின் முனையத்திற்கு காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டுகிறார்.

மேலும் தமிழக மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை துவங்கி வைத்து விட்டு, திருப்பூர் பெருமாநல்லூரில் பிற்பகல் 2.00 மணியளவில் பா.ஜ.க-வினர் பங்குபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் தொண்டர்களுடன் உரையாற்றுகிறார்”, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர் கட்சிகள் அனைத்தும் அஞ்சி நடுங்கும் கட்சியாக தமிழகத்தில் பா.ஜ.க வளர்ந்து வரும் நிலையில், பிரதமர் மோடியின் நாளைய திருப்பூர் வருகை கட்சி தொண்டர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Share