Pic Credits - Indiaglitz

கும்பகோணம் ராமலிங்கம் படுகொலை செய்யப்பட்டதற்கு 4 நாட்கள் கழித்து கண்டனம் தெரிவித்த ஸ்டாலின் இந்துக்களை ஏமாற்றுவதாகவும், அவரிடம் இந்துக்கள் உஷாராக இருக்க வேண்டும் என்றும்  பா.ஜ.க தேசிய செயலர் எச்.ராஜா டுவிட்டரில் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கடந்த 5-ம் தேதி கும்பகோணம் அடுத்த திருபுவனம் மேலதூண்டில் விநாயகம்பேட்டை பகுதியை சேர்ந்த ராமலிங்கம் படுகொலை செய்யப்பட்டார். பா.ம.க முன்னாள் நகர செயலாளரான இவர் திருபுவனம் பகுதியில், சமையல் பாத்திரங்கள் வாடகைக்கு விடுவது மற்றும் கேட்டரிங் சர்வீஸ் தொழிலும் செய்து வந்தார். இந்நிலையில், மதமாற்றத்தை இவர் கண்டித்தார் என்பதற்காக இவரை மர்ம கும்பல் படுகொலை செய்தது.

இந்த சம்பவத்துக்கு பா.ஜ.க மற்றும் பா.ம.க தலைவர்கள் கடும் கண்டனம் செய்தனர். பல்வேறு இந்து அமைப்புகளும் இசுலாமிய பயங்கரவாதிகளின் காட்டுமிராண்டித்தனமானமான இந்த செயலை கடுமையாக கண்டித்தனர். பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.இராஜா இந்த சம்பவத்தை மிக கடுமையாக கண்டித்ததுடன், கொலை செய்யப்பட்ட ராமலிங்கம் வீட்டுக்கு மறுநாளே நேரடியாக சென்று குடும்பத்தினரிடம் துக்கம் விசாரித்தார். காவல் துறை உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டு கொலையாளிகளை பிடிக்க வேண்டும் என்றும் கூறினார். இந்த கொலை தொடர்பாக 5 முஸ்லிம் இனத்தை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்த சம்பவத்துக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று (வெள்ளிக்கிழமை) ட்விட்டர் வாயிலாக 4 நாட்கள் கழித்து கண்டனம் தெரிவித்துள்ளார். தனது ட்வீட்டில், “கும்பகோணம் ராமலிங்கம் படுகொலை செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இந்த கொலையில் ஈடுபட்டோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களை நீதிமன்றத்தின் முன்பு நிறுத்தி விரைவில் தண்டனை பெற்றுக் கொடுத்து வன்முறைகளுக்கு முடிவு கட்ட வேண்டும்!” எனப் பதிவிட்டிருந்தார்

இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ள எச்.ராஜா, “இந்த படுகொலை திருச்சியில் திருமாவளவன் தலைமையில், ஜவாஹிருல்லா முன்னிலையில் ஸ்டாலின் சனாதன இந்து தர்மத்தை வேரறுப்போம் என்று பேசியதன் செயல் வடிவம் ஆகும். இந்து தர்மத்தை வேரறுக்க இந்து உணர்வாளர்கள் வேரறுக்கப்பட வேண்டுமே. 4 நாட்கள் கழித்து கண்டணம் யாரை ஏமாற்ற. இந்துக்களே உஷார்” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

Share