மோடி சர்கார் நிறைவேற்றிவரும், பிரதம மந்திரி பயிர் பாதுகாப்பீட்டு திட்டத்தில் 2016-17 ஆம் ஆண்டில் தமிழகம் அதிக பலனை அடைந்து தேசிய அளவில் முதலிடத்தில் உள்ளது. இத் திட்டத்தின் கீழ் 2018-19-இல் 16 லட்சத்து 39 ஆயிரம் விவசாயிகள் பதிவு செய்துள்ளனர். கடந்த ஆண்டை விட 2.41 லட்சம் விவசாயிகள் கூடுதலாகப் பதிவு செய்துள்ளனர் என்றார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

கோவை மாவட்டம் வையம்பாளையத்தில் விவசாய சங்கத் தலைவர் நாராயணசாமி நாயுடு நினைவிடத்தில் தமிழக அரசு சார்பில் ₹1.5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட மணிமண்டபத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதன்கிழமை திறந்து வைத்துப் பேசும்போது: பிரதம மந்திரி பயிர் பாதுகாப்பீட்டு திட்டத்தில் 2016-17 ஆம் ஆண்டில் தமிழகம் அதிக பலனை அடைந்து தேசிய அளவில் முதலிடத்தில் உள்ளது. இத் திட்டத்தின் கீழ் 2018-19-இல் 16 லட்சத்து 39 ஆயிரம் விவசாயிகள் பதிவு செய்துள்ளனர். கடந்த ஆண்டை விட 2.41 லட்சம்  விவசாயிகள் கூடுதலாகப் பதிவு செய்துள்ளனர். உணவு தானிய உற்பத்தியில் கடந்த ஏழு ஆண்டுகளில் தமிழகம் 5 முறை நூறு லட்சம் டன் உற்பத்தி செய்து சாதனை புரிந்துள்ளது. கூட்டுப் பண்ணை முறையை ஊக்குவிக்கும் வகையில் ₹100 கோடி ஒதுக்கீடு செய்து 2 லட்சம் சிறு, குறு விவசாயிகளை ஒருங்கிணைத்து திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

Share