கோவை வையம்பாளையத்தில் நாராயணசாமி நாயுடுவுக்கு தமிழக அரசு சார்பில் மணிமண்டபம் கட்டப்பட்டுள் ளது. ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள இந்த மணி மண்டபத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.இதையடுத்து, கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் சார்பில், நாட்டு மாட்டுக் கன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கப்பட்டது.


பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வேளாண்துறையில் பிரதமர் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், தமிழக அரசு தான் அதிக நிதி பெற்றுத் தந்துள்ளதாக தெரிவித்தார். கோதாவரி – காவிரி இணைப்புத் திட்டத்தின் மூலம், ஆற்று நீர் கடலில் வீணாக கலப்பது நிறுத்தப்பட்டு நிரந்தர தீர்வு காணப்படும் என்ற அவர், அத்திக்கடவு-அவினாசி திட்டத்துக்கு இம்மாத இறுதிக்குள் அடிக்கல் நாட்டப்படும் என்றும் கூறினார்.


மாநில அரசு நிதி மூலம் அவிநாசி – அத்திக்கடவு திட்டம் ₹1,652 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த ஒப்பந்தப்புள்ளி பெறப்பட்டு அரசு பரிசீலனையில் உள்ளது. இந்த மாதம் இறுதிக்குள் இந்த திட்டத்தை செயல்படுத்த அடிக்கல் நாட்டப்படும். அவிநாசி-அத்திக்கடவு திட்டத்தில் விடுபட்ட பகுதிகளான அன்னூர், காரமடை, பெரியநாயக்கன்பாளையம், எஸ்.எஸ்.குளம் ஆகியவை அவிநாசி-அத்திக்கடவு திட்டம் பகுதி 2 மூலம் செயல்படுத்தப்படும். ₹328 கோடி நிதி ஒதுக்கி நதிகள், ஓடைகள் குறுக்கே தடுப்பணைகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

Share