தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த திருபுவனம் வினாயகம்பேட்டையைச் சேர்ந்த இராமலிங்கம் என்பவர்  தமது கடையில் வணிகத்தை முடித்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது திருபுவனம் புது முஸ்லீம் தெருவில் ஒரு கும்பலால் வழிமறித்து வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். திருபுவனம் பகுதியில் நிகழ்த்தப்பட்டு வந்த மதமாற்றத்தை கடுமையாக எதிர்த்து வந்தவர் இராமலிங்கம். இதனால் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த சிலருடன் அவருக்கு மோதல் இருந்ததாகக் கூறப்படுகிறது. அதன் காரணமாகவே அவர் கொலை செய்யப்பட்டதாகத் தெரியவருகிறது. மதமாற்றத்தை எதிர்த்ததற்காக ஒருவரை கொடூரமாக படுகொலை செய்வதை மனசாட்சியுள்ள எவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

இத்தகைய செயல்கள் மனிதகுலத்திற்கு எதிரானவை. மத நல்லிணக்கத்தைக் குலைத்து மத மோதலை ஏற்படுத்தும் வகையிலான இத்தகைய செயல்களை அனுமதிக்கக் கூடாது. இராமலிங்கம் படுகொலை குறித்த வழக்கின் விசாரணையை சிறப்பு புலனாய்வுப் படையை அமைத்து மேற்கொள்ள வேண்டும். இதன் பின்னணியில் யார் இருந்தாலும் அவர்கள் அம்பலப்படுத்தப்பட வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதன் தொடர்ச்சியாக நேற்று படுகொலை செய்யப் பட்ட ராமலிங்கம் கொலை வழக்கில், கொலையாளிகளுக்கு இடம் கொடுத்து, கொலைக்கு உடந்தையாக இருந்தவர்கள் என்ற வகையில் 5 பேரைக் கைது செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். மேலும், கைது செய்யப்பட்ட 5 பேருக்கும் ஆதரவாக நாளை பாப்புலர் பிரண்ட் சார்பாக போராட்டம் நடைபெறவுள்ளது. இந்நிலையில், கைதான முஸ்லீம்கள் 5 பேருக்கு ஆதரவாக ஜமாத் ஏற்பாடு செய்திருந்த வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகினர். பெரிய அரசியல் கட்சிகளே தங்கள் கட்சித் தலைவர்கள் கைதாகும் போது வழக்கறிஞர்களைத் தேடி அலையும் நிலையில். கைதான 5 முஸ்லீம்களுக்கும் ஆதரவாக அவர்கள் கைது செய்யப் படுவதற்கு முன்பேயே வழக்கறிஞர்களை ஏற்பாடு செய்து சட்ட உதவிகளைத் தொடங்கி விட்டது. 

https://www.facebook.com/adv.mmabbas/videos/1490346484434769/

இந்த சதிவேலையில் ஈடுபட்டது மட்டுமல்லாது TNM MEDIA என்ற முகநூல் பக்கத்தில் ராமலிங்கம் என்ற ரவுடி கொல்லப்பட்டார் என்று அப்பட்டமான பொய்யை பரப்பி வருகிறது. கஜா புயல் வந்த சமயத்தில் மக்களுக்கு உணவு சமைக்க இலவசமாக பாத்திரங்கள் மற்றும் சமையல் பணியாளர்களை அனுப்புவதாக கூறிய கருணை குணம் கொண்டவரை, தனது சுயலாபத்திற்காக ரவுடி என்ற பட்டம் கட்டியுள்ளது வேதனையை ஏற்படுத்துகிறது. 


Share