தமிழ் நாட்டில் மோடி அலை இல்லை என்று பிம்பங்கள் உருவாக்கப்பட்ட போதிலும் உலகத்தின் முதல் மோடி பின்னணியிலான கஃபேயை தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் உருவாக்கியுள்ளனர் இந்த இளம் தம்பதியினர் தினேஷ் ரோடி மற்றும் சௌமியா தினேஷ். மேலும் இவர்கள் 2013 முதலே Namo Candy எனும் பெயரில் தமிழ்நாட்டின் பாரம்பரிய கடலை மிட்டாய் மற்றும் அதை சார்ந்த மிட்டாய் வகைகளை உற்பத்தி செய்து பல நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்து வருகின்றனர், இவர்கள் இப்போது ரோடி ரெஸ்டோ எனும் நமோ கடலை மிட்டாயின் பிரத்யேக ஷோரூம் மற்றும் கஃபே மூலம் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் மீது கொண்ட அதீத பற்றை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்தக் கஃபேயில் உள்ள சிறப்பம்சம் மோடியின் உருவம் வரையப்பட்டதோடு சமூக அக்கறையுடன் அவர் கடந்த ஐந்து ஆண்டுகள் கொண்டு வந்த நலதிட்டங்களின் பெயர்களும் எழுதப்பட்டுள்ளது. இங்கு மோடி அரசின் திட்டங்களையும் அதைப் பெறுவதற்கான வழி முறையையும் தெளிவுபடுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் இவர்கள் பகிர்ந்த கடையின் புகைப்படம் இணையவாசிகள் மத்தியில் வரவேற்பைப்பெற்று மிக வேகமாக பகிரப்பட்டு வருகிறது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் இந்த நேரத்தில் இது மோடி அலையின் தொடக்கமாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

தமிழ்நாட்டிற்கு மோடி நிறைய திட்டங்களை கொடுத்துள்ளார் ஆனாலும் திட்டத்தைப் பற்றிய விழிப்புணர்வு சிலருக்கு சென்றடையாததால் தான் அவர்கள் மோடியை எதிர்க்கின்றனர். நாங்கள் அதை எங்கள் வாடிக்கையாளர்களிடம் கொண்டு செல்ல விரும்புகிறோம் என்றனர். அரசியலுக்கு அப்பாற்பட்டு இந்த தேசத்தின் மீது மோடி வைத்துள்ள பற்று எங்களை வெகுவாக கவர்ந்தது, உலக அரங்கில் ஒவ்வொரு இந்தியனையும் தலைநிமிர்ந்து நிற்கச் செய்துள்ளார். நாங்கள் ஏற்றுமதி தொழில் செய்து வருவதால் பல நாடுகளில் உள்ள எங்களது வாடிக்கையாளர்கள் கூட மோடியின் நடவடிக்கைகளை பற்றித் தெரிந்து வைத்துள்ளனர். அப்போதுதான் மோடி இந்தியர்களுக்கான பிரதமர் மட்டுமல்ல உலக அரங்கில் அவர் ஒரு மிகச் சிறந்த பிராண்ட் என்பதை உணர்ந்தோம்.

பிரதமர் மோடி வேலைக்கு செல்வோர்களை விட அதிக தொழில்முனைவோர்களை உருவாக்கவே விரும்புகிறார். உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளார். பெண் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்க பல திட்டங்களை கொடுத்துள்ளார். இதையும் புதிய தொழில்முனைவோர்களுக்கு எடுத்துச் செல்லும் வேலையிலும் ஈடுபட்டுள்ளோம் என்றனர்.

Share