முன்பதிவு செய்யாமல் ரயில் பயணம் மேற்கொள்ளும் ஏழை எளிய மக்களுக்காக வருகிறது அதி நவீன பொது பிரிவு ரயில் பெட்டிகள். முன்பதிவு செய்யாமல் பொதுப்பிரிவில் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு சிறந்த பயண அனுபவம் வழங்கும் முயற்சியில், இந்திய ரயில்வே துறை, 1,000 க்கும் மேற்பட்ட தீன தயாளு ரயில் பெட்டிகளை உருவாக்கி வருகின்றன.

பொது மக்கள் நீண்ட தூரம் வசதியான பயணத்தை மேற்கொள்வதற்காக 2016 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது தான் தீன தயாளு ரயில் பெட்டிகள். பியுஷ் கோயல் தலைமையிலான இந்திய இரயில்வே துறையால் அடுத்த இரண்டு நிதி ஆண்டுகளில், (2019-2020, 2020-2021), 1,000 க்கும் மேற்பட்ட முன்பதிவு இல்லா தீன தயாளு ரயில் பெட்டிகள் தயாரிப்பதற்கான திட்டம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அடுத்த இரண்டு நிதி ஆண்டுகளில் வருடத்திற்கு தலா 540 முன்பதிவில்லா ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில், சென்னையில் உள்ள I.C.F (ஐ.சி.எஃப்) தொழிற்சாலையில் அதிகபட்ச தீன தயாளு ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படடும். மீதமுள்ள பெட்டிகள் ரெய்பரேலியில் உள்ள M.C.F மற்றும் கபுர்தாலாவில் உள்ள R.C.F தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும். கடைசி நிமிட பயணத்தை பயணிப்பதற்காக, இந்திய இரயில்வே தீன தயாளு ரயில் பெட்டிகளின் உற்பத்தியை அதிகரிக்கிறது.

தீன தயாளு ரயில் பெட்டிகளில் உள்ள சில பயணிகள் நலன் சார்ந்த முக்கிய அம்சங்கள்:

  • இரண்டாம் வகுப்பு பெட்டிகளின் இருக்கைகளை விட வசதியான இருக்கைகள்.
  • பயணிகளின் குடிநீர் தேவைக்காக சுத்தீகரிக்கப்பட்ட குடிநீர் வசதி.
  • பைகள் மற்றும் லக்கேஜ் வைப்பதற்காக குஷன் ரேக்குகள்.
  • அதி நவீன பையோ கழிப்பறைகள்.
  • நீர் அளவு குறிகாட்டிகள் மற்றும் குப்பை தொட்டிகள்.
  • திருட முடியாத அமைப்பு மூலம் தீ அணைப்பு கருவிகள்.
  • அதிகமான மொபைல் சார்ஜ் செய்யும் புள்ளிகள்.

முழுவதும் முன் பதிவில்லா சூப்பர் பாஸ்ட் அதி விரைவு ரயில் வண்டிகளாக விளங்குகிறது அந்த்யியோதயா அதி விரைவு ரயில் வண்டிகள். அந்த ரயில் பெட்டிகள் போன்றே தீன தயாளு ரயில் பெட்டிகளும் இருக்கும் என கூறப்படுகிறது.

Share