வேளாண் எந்திரங்களை விவசாயிகள் குறைந்த வாடகையில் பயன்படுத்த பதிவு செய்வதற்கான செயலியின் சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். வேளாண்மை தொடர்பான மானியம், பயிர்க்காப்பீடு உள்ளிட்ட 12 சேவைகளைக் கொண்ட உழவன் என்ற கைபேசி செயலி ஏற்கனவே பயன்பாட்டிலுள்ளது. இந்த செயலியில் டிராக்டர் அன்டு ஃபார்ம் எக்யூப்மெண்ட்ஸ் லிமிடெட், ஜெஃபார்ம் என்ற நிறுவனங்களுடன் இணைந்து வேளாண் பணிகளுக்கான எந்திரங்களை விவசாயிகள் வாடகைக்கு பயன்படுத்த பதிவு செய்வதற்கான சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாய எந்திரங்களை வாடகைக்கு விடுவோரும், பயன்படுத்த விரும்புவோரும் தொடர்பு கொண்டு பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செயலியை பயன்படுத்த முடியாதவர்கள் 1800 420 0100 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை பயன்படுத்தலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. 

Picture Courtesy : Namibia ICT Forum

Share