தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் திருபுவனத்தில் பா.ம.க நிர்வாகி ராமலிங்கம் என்பவரை முஸ்லீம் மதத்தை சேர்ந்த சில சமூக விரோதிகள் மதமாற்றத்தை எதிர்த்ததற்காக கொலை செய்துள்ளனர். 

ராமலிங்கத்தின் கொலைக்கு நியாயம் கேட்டு பல்வேறு இந்து அமைப்புகளும், பாஜக மற்றும் பாமக உள்ளிட்ட கட்சிகளும் களமிறங்கியுள்ளது. இந்நிலையில் அதிர்ச்சி அளிக்கும் விதமாக, கொலையாளிகளுக்கு ஆதரவாக முஸ்லீம் அமைப்புகள் மற்றும் திருபுவனம் ஜமாத் அறிக்கை வெளியிட்டுள்ளதாக தற்பொழுது இணையத்தில் ஒரு தகவல் வைராகியுள்ளது. அதனை எச்.ராஜா தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து அந்த புகைப்படத்தில் உள்ள அறிக்கையில்,

“நம் திருப்புவனம் பெரிய ஜமாத் அமைப்பில் உள்ள அனைவருக்கும் சலாத்தினை தெரிவித்துக் கொள்கிறோம். திருபுவனம் இராமலிங்கம் கொலை வழக்கில் கைது செய்யப்படும் நம் சகோதரர்கள் அனைவருக்கும் தார்மீக அடிப்படையில் முழு ஆதரவு அளிக்க ஜமாத் முன் வந்துள்ளது. கைது செய்யப்படும் இஸ்லாமிய சகோதரர்கள் அனைவருக்கும் ஜாமீன் எடுக்க, அவர்களது குடும்பத்தினருக்கு நிதி உதவி செய்ய தங்களது வருமானத்தில் 2% தங்களது திருபுவனம் பெரிய ஜமாத் அமைத்துள்ள கமிட்டி தலைவர் சிராஜுதீன், செயலாளர் ராசுதீன் பொருளாளர் ஹாஜி முஹம்மது தாஜுதீன் மற்றும் சர்புதீன்(நிஸ்வான் மதரஸா தலைவர்), ஹிதாயதுல்லாஹ், ரஹ்மான் சாதிக் அகீயோர் கொண்ட கமிட்டியிடம் வாராவாரம் செலுத்த வேண்டும் என திருப்புவனம் பெரிய பள்ளிவாசல் ஜமாத்தினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. புது முஸ்லீம் தெரு ஜமாத் தலைவர் நூர்தீன், பெரிய பள்ளிவாசல் முத்தவல்லி ஹாஜி பஜலூர் ரஹ்மான் ஆகியோர் கைது செய்யப்படும் சகோதர்களின் குடும்பத்திற்க்கு தேவையான பொருள் உதவிகளை கவனிப்பார்கள். பாப்புலர் ஃப்ரண்ட்ன் திருப்புவனம் யூனிட் தலைவர் இலியாஸ், S.பைசல் முஹம்மது, SDPI அமைப்பின் திருப்புவனம் கிளை தலைவர் முஹம்மது ஆகியோர் கொண்ட குழு வழக்கறிஞர்கள் கொண்ட குழுவை ஏற்ப்பாடு செய்து வழக்குகளை கவனிக்கும். நம்மாலான முயற்சியில் கல்லாமையை இல்லாமை ஆக்கி மிஞ்சுவோம்.

“விவேகத்துடனும், அழகிய அறிவுரையுடனும் உமது இறைவனின் பாதையை நோக்கி அழைப்பீராக! அவர்களிடம் அழகிய முறையில் விவாதம் செய்வீராக!”- அல்குர்ஆன் (16:125)

வஸ்ஸலாம்” என்பதாகும்.

இதெல்லாம் முஸ்லீம் மதவெறி இல்லையா? என இணையத்தில் பலர் விமர்சித்து வருகின்றனர்.

Share