கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் சமையல் கலைஞர். திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு உணவு தயாரித்து கொடுக்கும் வேலை செய்து வருகிறார். இதற்காக திருபுவனம் அருகாமையில் உள்ள பகுதிகளில் உள்ளவர்களை வேலைக்கு எடுப்பது வழக்கம்.

நேற்று காலை தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள் வசிக்கும் பகுதியில் தனது பணியாளர்களை ராமலிங்கம் தயார்படுத்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இரண்டு பேர், மதமாற்றம் குறித்து பேசியுள்ளனர். ராமலிங்கத்தின் தொழிலாளர்களிடம் மதம் மாறினால் ஏற்படும் நன்மைகள் குறித்து பேசியதாக சொல்லப்படுகிறது. அப்போது அதை கண்டித்துப் பேசிய அவர் பணி முடிந்து இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதி வழியாக செல்லும்போது கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த படுகொலைக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் உட்பட தலைவர்கள் தங்களது கண்டனம் தெரிவித்துள்ளனர். 
இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனும் டுவிட்டரில் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

திருபுவனத்தில்..மதமாற்றத்தைத்தடுத்து..இந்துமத உணர்வுகளை நியாயமாக எடுத்துரைத்த, பா ம க வைச்சார்ந்த சகோதரர் இராமலிங்கம் அடுத்த நாளே,அநியாயமாக்க் கொல்லப்ட்டிருப்பது..நெஞ்சைஉலுக்குவதாக.உள்ளது..செய்தி கேட்ட உடனே தஞ்சைமாவட்டத்தலைவரை தொடர்பு கொண்டேன்,குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும்.

இது தனிப்பட்ட சம்பவமாக்க்கருதப்படாமல்..மதச்சார்பற்ற தன்மை என்ற வெளிப்பூச்சோடு..இந்துமதம்,இந்துமதச்சகோதர்ர்கள் எந்த அளவிற்கு வஞ்சிக்கப்படுகிறார்களென்பதை இந்த சமூகம் எவ்வளவு இலகுவாக புறந்தள்ளிக்கொண்டிக்கொண்டிருக்கிறது என்பதையும் அறிந்து சமூகத்திற்கு புரியவைக்கவேண்டியகடமை உள்ளது..என்று கூறியுள்ளார்.

Share