ஆயுஷ்மன் பாரத் என்ற பெயரில் பிரபலமாக அறியப்படும் பிரதமரின் ஜன் ஆரோக்கிய யோஜனா (PM-JAY) திட்டத்தின் ஆண்ட்ராய்ட் கைபேசிக்கான செயலி தற்போது கூகுள் ப்லே ஸ்டோரில் – Google Playstore இல் உள்ளது. அயூஷமான் பாரத் திட்டத்தின் பயன்பாட்டு விவரங்களை தெரிந்துகொள்ள இந்த செயலியை பதிவிறக்கம் செய்யலாம்.
அயூஷ்மான் பாரத் திட்டத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஹிந்து பூஷண் இந்த திட்டத்தை துவங்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற தாங்கள் தகுதியுள்ளவர்களா என மக்கள் தெரிந்துகொள்ள இந்த செயலி உதவும்.
எவ்வளவு பணத்தை செலவழித்துள்ளோம் என்று இந்த செயலியில் உள்ள வால்லட்டின் மூலம் தெரிந்துகொள்ளலாம். குறைகளை பதிவு செய்யலாம். அருகிலுள்ள மருத்துவமனைகளை இந்த செயலி மூலம் தெரிந்து கொள்ளலாம்.
பெயர், விலாசம் மற்றும் ஐடி விவரங்களை தருவதன் மூலம், பயனாளிகள் தங்கள் தகுதியை சரிபார்க்க முடியும்.
கடந்த சில நாட்களுக்கு இந்த செயலி பயன்பாடு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. ஏற்கனவே 10,460 பேர் இதை பதிவிறக்கம் செய்துள்ளனர். விரைவில் ஒரு லட்சம் பேர் இதை பதிவிறக்கம் செய்யக்கூடும் என்று பூஷன் தெரிவித்தார்.
கடந்த செவ்வாய்க்கிழமை வரை, 10,80,183 நோயாளிகள் இந்த திட்டத்தின் மூலம் இலவச மருத்துவ சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர். ₹1041.3 கோடிக்கான கோரிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டு, ₹808.2 கோடிக்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 14,756-க்கும் அதிகமான தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள் இந்த திட்டத்தில் இணைந்துள்ளன.
அயூஷ்மான் பாரத் ஆண்ட்ராய்ட் செயலியை பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.
Disciple of Vedanta & Yoga. Writes Java code in office and in free time, writes about Socio-Religious & Politics.