கடந்த ஜனவரி மாதம் தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த தி.மு.க கிராம சபை கூட்டத்தில் கனிமொழி கலந்து கொண்டார். தற்போது தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலினின் மகனும், நடிகருமான மூன்றாம் கலைஞர் உதயநிதி ஸ்டாலின் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தொகுதியில் நேற்று நடைபெற்ற ஊராட்சி சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு மக்களிடையே குறைகளை கேட்டறிந்தார். அவரிடம் அப்பகுதி மக்கள் பல்வேறு குறைகளை முன்வைத்தனர்.

அப்போது 11ஆம் வகுப்பு மாணவி கேட்ட கேள்விக்கு உதயநிதி ஸ்டாலின் பதில் அளிக்கையில், “தி.மு.க ஆட்சியில் டிவி எங்க தாத்தா கொடுத்தார், எங்க அப்பா செட் டாப் பாக்ஸ் தருவார்”, என்று கூறினார்.

Share