‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் தயாரிப்பில் எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படத்துக்கு தற்காலிகமாக ‘SK-13’ என்று குறிப்பிட்டு வந்தனர். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ‘Mr.லோக்கல்’ என்ற டைட்டிலுடன் வெளியானது. இந்த ஃபர்ஸ்ட் லுக்கில் படத்தின் தலைப்புக்கு ஏற்ப சிவகார்த்திகேயன் கோட் சூட் அணிந்தவாறு, கையில் ஒரு கண்ணாடி டீ கிளாஸுடன் காலை குத்துக்கால்போட்டு ஸ்டைலாக ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருப்பதுபோல் புகைப்படம் வெளியானது. இந்த படம் வெளியானதிலிருந்தே இப்படம் விஜய்யை காப்பியடித்து சிவகார்த்திகேயன் போஸ் கொடுத்திருப்பதாக சோஷியல்மீடியாவில் சர்ச்சை கிளம்பியிருக்கிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். ‘ஹிப் பாப் தமிழா’ ஆதி இசை அமைக்கிறார். ‘Mr.லோக்கல்’ கோடை விடுமுறைக்கு வெளியாக இருக்கிறது. இந்தப்படத்துக்கு முதலில் மிஸ்டர் ஹீரோ என்ற டைட்டிலை வைக்க திட்டமிட்டனர். அந்த டைட்டில் வேறு ஒருவரிடம் இருந்ததால் கடைசியில் மிஸ்டர் லோக்கல் என்ற டைட்டிலை வைத்துள்ளனர்.

Share