இடைக்கால பட்ஜெட்டில் ஒட்டுமொத்த செலவுகள் வரும் நிதியாண்டில் 27 லட்சத்து 84 ஆயிரத்து 200 கோடியாக உயர்ந்துள்ளது. மத்திய அரசின் நிதியில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு 3 லட்சத்து 27 ஆயிரத்து 679 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேசிய கல்வித் திட்டத்திற்கான நிதி 32 ஆயிரத்து 334 கோடி ரூபாயில் இருந்து 38 ஆயிரத்து 572 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்திற்கு நிதி 23 ஆயிரத்து 357 கோடி ரூபாயில் இருந்து 27 ஆயிரத்து 584 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்டோருக்கான நலத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு 62 ஆயிரத்து 474 கோடி ரூபாயில் இருந்து, 76 ஆயிரத்து 801 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. பழங்குடியினருக்கான நிதி ஒதுக்கீடு 39 ஆயிரத்து 135 கோடி ரூபாயில் இருந்து 50 ஆயிரத்து 86 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. 

கடந்த நிதியாண்டில் பொதுத்துறை நிறுவன பங்குகளை விலக்கிக் கொண்டதன் மூலம் 1 லட்சம் கோடி ரூபாய் ஈட்டப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு 60 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் கூடுதல் நிதி வழங்கப்படும். இடைக்கால பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு, இதுவரை இல்லாத அளவுக்கு 1 லட்சத்து 58 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Share