விளையாட்டு

மகளிர் ஐ.சி.சி தர வரிசை – ஸ்மிருதி மந்தானா முதலிடம்

மகளிர் கிரிக்கெட் பேட்ஸ் உமன்களுக்கான ஐ.சி.சி ஒருநாள் சர்வதேசப் போட்டி தர வரிசையில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தானா முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

மந்தானா 3 புள்ளிகள் உயர்ந்து முதலாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

நியூசிலாந்திற்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் ஸ்மிருதி சிறந்த வீராங்கனையாக அறிவிக்கப்பட்டவர்.

ஆஸ்திரேலியாவின் எலிசி பெர்லி இரண்டாவது இடத்தில் உள்ளார். மற்றொரு ஆஸ்திரேலிய வீராங்கனை மெக் லென்னின் 3ஆவது இடத்தில் உள்ளார். பந்து வீச்சாளர் தர வரிசையில் இந்திய அணித் தலைவர் மித்தாலி ராஜ் ஐந்தாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார். வேகப்பந்து வீச்சாளர் ஜுலான் கோஸ்வாமி நான்காம் இடத்தில் உள்ளார்.  பூனம் யாதவ் எட்டாவது இடத்திலும், தீப்தி சர்மா ஒன்பதாவது இடத்திலும் உள்ளனர். ஆல்ரவுண்டர் வரிசையில் தீப்தி நான்காவது இடத்தில் உள்ளார்.

Tags
Show More
Back to top button
Close
Close