வரும் மக்களவைத் தேர்தலில் தனது தேர்தல் அறிக்கையைத் தயாரிப்பதற்கு மக்களின் ஆலோசனையைப் பெறும் ஒரு மாத கால நடவடிக்கையை பா.ஜ.க  தொடங்கியுள்ளது.  இந்த நடவடிக்கைக்கு மோடியுடனான பாரத மனதின் குரல் எனப்பொருள்படும் ‘பாரத் கே மன் கி பாத், மோடி கே சாத்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.  பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் திரு சம்பித் பத்ரா செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.  புதுதில்லியில் பா.ஜ.க தேசியத் தலைவர் திரு அமித் ஷா, கட்சியின் மூத்த தலைவர் திரு ராஜ்நாத் சிங் ஆகியோர் இத்திட்டத்தைத் தொடங்கி வைப்பார்கள் என்று அவர் கூறினார்.

Share