செய்திகள்

அடுத்த ஒரு வாரத்திற்குள்தமிழகத்தில் 1,800 மருத்துவர்கள் மற்றும் 2,345 செவிலியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்

தமிழகத்தில் சுகாதாரத்துறையின் செயல்பாடுகள் பல மடங்கு விரிவடைந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் திரு. விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.  வேலூரில் அரசு மருத்துவமனையில் ₹14 கோடி மதிப்பிலான விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவைத் தொடங்கி வைத்துப் பேசிய அவர், அடுத்த ஒரு வார காலத்திற்குள் மாநிலத்தில் 1,800 மருத்துவர்கள் மற்றும் 2,345 செவிலியர்கள் நியமிக்கப்படவுள்ளதாகக் கூறினார். மாநிலத்தில் 75 இடங்களில் விபத்து தொடர்பான உயர் சிகிச்சை சிறப்பு மையங்கள் திறக்கப்படவுள்ளதாகத் தெரிவித்தார். கடந்த 6 ஆண்டுகளில் மருத்துவத்துறையில் 25,000 பேர் பணி அமர்த்தப்பட்டிருப்பதாக அமைச்சர் கூறினார்.

Tags
Show More
Back to top button
Close
Close