இந்தியா

இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கத்துக்கு(சிமி ) மேலும் 5 ஆண்டுகள் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது: உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

1977 ம் ஆண்டு ஏப்ரல் 25 ல் உ.பி., மாநிலத்தில் உள்ள அலிகரில் சிமி எனப்படும் இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த அமைப்பு மக்களுடைய மனதை மாசுபடுத்தும் செயல்களில் ஈடுபடுவதாகவும், நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கூறி பல்வேறு கட்டங்களில் மத்திய அரசு தடை விதித்து வந்துள்ளது. இந்த அமைப்பிற்கு நாடு முழுவதும் கிளை அமைப்புகள் இருந்து வருகின்றன.

2014 பெங்களூரு சின்னசாமி மைதானம், அதே ஆண்டில் போபாலில் சிறை உடைப்பு, 2017 ல் பீகார் மாநிலம் கயாவில் நடந்த சம்பங்கள் அனைத்திலும் இந்த இயக்கத்தைசேர்ந்த சிலர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த 2001 ம் ஆண்டில் இந்த அமைப்பு சட்ட விரோதஅமைப்பாக மத்திய அரசு தடை விதித்திருந்தது.தொடர்ந்து 2014 ம் ஆண்டில் 5 ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு தடை நீட்டிக்கப்பட்டு மத்தியஅரசு உத்தரவிட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது: இந்த அமைப்பின் சட்ட விரோத செயல்களை உடனடியாக கட்டுப்படுத்த தவறினால் தலைமறைவாக இருக்கும் இவ்வமைப்பினர் மீண்டும் ஒன்று கூடி நாட்டுக்கு எதிரான கருத்துக்களை பரப்பி பிரிவினை வாதத்தை தூண்டி விடக்கூடும் என்பதால் அடுத்து வரும் 5 ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்படுவதாக செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags
Show More
Back to top button
Close
Close