செய்திகள்

சபரிமலை விவகாரத்தில் கேரள அரசு மீது ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் குற்றச்சாட்டு

நீதிமன்றம் உததரவு பிறப்பித்தும், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் இந்தியாவை சேர்ந்த பெண்கள் செல்ல விரும்பாத நிலையில் வேண்டுமென்றே இலங்கையிலிருந்து பெண்களை வரவழைத்து சட்டத்தை அமல்படுத்துவதாகக் கூறி, கோயிலுக்கு வந்த பக்தர்களை கேரள அரசு கடுமையாக நடத்தியது என்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

ப்ராயக்ராஜ் விஸ்வ இந்து பரிசத் அமைப்பின் தர்ம சனாசத் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், “உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல் செய்வதாகக் கூறிக்கொண்டு, கேரள அரசு ஐயப்ப பக்தர்களை மிகவும் கடுமையாக நடத்தியது.

உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் பெண்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல விரும்பினால் அவர்களை அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால், உச்ச நீதிமன்றம் அனுமதித்தும் எந்த பெண்ணும் சபரிமலைக்கு செல்லவிரும்பவில்லை. அதனால்தான் இலங்கையில் இருந்து பெண்களை வேண்டுமென்றே அழைத்துவந்து, பின்பக்கம் வழியாக சாமி தரிசனம் செய்ய கேரள அரசு அனுமதித்தது.

அனைத்து மதங்களையும் பின்பற்றுவோரும் எந்த வழிபாட்டுத் தலத்துக்கும் செல்லலாம். ஆனால்,  சபரிமலை ஐயப்பன் கோயில் சாதாரண இடம் அல்ல, குறிப்பிட்ட பாரம்பரியங்களை பின்பற்றும் இடமாகும். இந்த தீர்ப்பு கோடிக்கணக்கான இந்துக்களின் மனநிலையை பாதிக்கும் என்பதை நீதிமன்றம் சிந்துத்துப் பார்க்கவில்லை.

இந்தச் சம்பவங்களால் இந்து மதத்தைச் சேர்ந்த மக்கள் மனவேதனைக்கு உள்ளாகி, போராட்டம் நடத்தினார்கள். இந்தப் போராட்டத்துக்கு நாங்கள் ஆதரவு அளித்தோம். இந்து மக்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்த ஏராளமான முயற்சிகள் நடக்கின்றன. ஆதலால், அனைத்து இந்துக்களும் ஒன்று சேர்ந்து, ஒற்றுமையாக இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

Tags
Show More
Back to top button
Close
Close