செய்திகள்

அரசுப்பள்ளி மாணவர்கள் 50 பேர் பின்லாந்து நாட்டிற்கு கல்விச் சுற்றுலா : தமிழக அரசு அசத்தல் நடவடிக்கை

தமிழகத்தில் செங்கோட்டையன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு அத்துறையில் பல அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகள், அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள், பள்ளிக் கல்வித்துறைக்கென தனி தொலைக்காட்சி என அடுக்கடுக்காக அவர் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மாணவர்கள் மற்றும் பொற்றோர் இடையே பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் நேற்று தமிழகம் முழுவதிலும் உள்ள பள்ளிகளில் இருந்து 50 மாணவ-மாணவிகளை தேர்ந்தெடுத்து  அவர்களை வெளி நாடுகளுக்கு கல்வி சுற்றுலா அனுப்பும் திட்டத்தை கடந்த ஜனவரி 20 ஆம் தேதி தொடங்கி வைத்தார். முதன் முறையாக 50 மாணவர்கள்  பின்லாந்துக்கு கல்விச்சுற்றுலா செல்ல உள்ளனர் என்றும் கூறிய செங்கோட்டையன், அவர்களுக்கு பாஸ்போர்ட், விமான டிக்கெட் போன்றவற்றை வழங்கினார்.

அப்போது பேசுகையில், அடுத்த கல்வியாண்டு முதல் தமிழகம் முழுவதும் ஒரே கல்விமுறை அமல்படுத்தப்படும் என்று கூறிய அவர், 8 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சிறிய அளவிலான மடிக்கணினி வழங்கப்படும் என்று தெரிவித்தார். அரசு பள்ளி மாணவ, மாணவிகள் ஆயிரம் பேர் வரையில் மருத்துவப் படிப்பில் சேர்ப்பதே அரசின் லட்சியம் என்றும் கூறினார்.

இந்த நிலையில் கல்விச்சுற்றுலா திட்டத்திற்கு தேர்வான பள்ளிக்குழந்தைகள் முதல் முறையாக பின்லாந்து நாட்டுக்கு கல்விசுற்றுலாவிற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இது குறித்து ட்விட்டரில் தகவல் வெளியிட்டிருந்த செங்கோட்டையன், தமிழகத்தை கல்வியில் முன்னோடியாக திகழச்செய்யும் நோக்கில் ₹3 கோடி நிதியில், அரசுப்பள்ளி மாணவர்கள் 50 பேர் பின்லாந்து நாட்டிற்கு கல்விச் சுற்றுலாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதேபோல், மலேசியா, சிங்கப்பூர், கனடா உள்ளிட்ட நாடுகளுக்கும் தலா 25 மாணவர்கள் அனுப்பப்படவுள்ளனர்’ என்று கூறியுள்ளார்.

 

Tags
Show More
Back to top button
Close
Close