செய்திகள்

₹7,214 கோடி நிவாரணம் : வெள்ளம், வறட்சி, புயல் பாதித்த மாநிலங்களுக்கு மத்திய அரசின் நடவடிக்கை

வெள்ளம், வறட்சி, புயல் போன்ற இயற்கை பேரிடர்களால் பாதித்த 6 மாநிலங்களுக்கு மத்திய அரசு ₹7,214 கோடி நிவாரணம் வழங்குகிறது. வெள்ளம், வறட்சி, புயல் போன்ற இயற்கை பேரிடர்களால் பாதித்த 6 மாநிலங்களுக்கு மத்திய அரசு ₹7,214 கோடி நிவாரணம் வழங்குகிறது.

மாநிலங்களின் கோரிக்கை குறித்து மத்திய உள்துறை அமைச்சர்  ராஜ்நாத் சிங் தலைமையிலான உயர் அதிகாரக்குழு கூடி, பரிசீலித்து கீழ்க்கண்டவாறு நிவாரண நிதி வழங்க அனுமதி அளித்தது. வறட்சி பாதித்த மராட்டியத்துக்கு ₹4,714 கோடியே 28 லட்சம், கர்நாடகத்துக்கு ₹949 கோடியே 49 லட்சம், ஆந்திராவுக்கு ₹900 கோடியே 40 லட்சம், குஜராத்துக்கு ₹127 கோடியே 60 லட்சம் நிதி வழங்கப்படுகிறது.

மழை, வெள்ளம், நிலச்சரிவால் நிலை குலைந்து போன இமாசல பிரதேசத்துக்கு ₹317 கோடியே 44 லட்சம் வழங்கப்படும். மழை, வெள்ளத்தால் சேதங்களை சந்தித்த உத்தரபிரதேசத்துக்கு ₹191 கோடியே 73 லட்சம் நிதி வழங்கப்படுகிறது. புயலால் நிலைகுலைந்து போன புதுச்சேரிக்கு ₹13 கோடியே 9 லட்சம் நிவாரணம் தரப்படுகிறது. இந்த தகவல்களை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

Tags
Show More
Back to top button
Close
Close