செய்திகள்

பத்ம விருதுகள் வரலாற்றில் முதன் முறையாக 12 விவசாயிகளுக்கு விருது அளித்து மோடி சர்க்கார் பெருமிதம் – அரசு விருதுகள் மக்கள் விருதாக மாறியதாக பலரும் பாராட்டு

இந்திய அரசால் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட சில துறைகளில் சாதனை படைத்தவர்கள் மற்றும் தங்கள் தனித்திறனை வெளிப்படுத்தியவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். இந்த விருதுகள் மிகவும் கவுரவமான விருதுகளாக கருதப்படுவதால் ஏராளமானோர் இந்த விருதுகள் குறித்து நீண்ட கனவு காண்பதுண்டு. பெரும்பாலும் வீர தீர செயல்களில் ஈடுபட்டவர்கள், இராணுவத்தில் வீரசெயல்கள் புரிந்தவர்கள், விஞ்ஞானிகள், சினிமா கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், சமூக சேவை புரிந்தவர்கள் இப்படிப்பட்ட பிரபலங்களுக்கே இந்த விருதுகள் வழங்கப்படும். சில சமயங்களில் வேண்டப்பட்டவர்களுக்கு மட்டும் தான் இந்த விருதை அரசு வழங்கும் எனவும் முந்தைய ஆட்சிக்காலங்களில் குற்றம் சாட்டப்பட்டதுண்டு. எனவே உண்மையான, திறமையான கலைஞர்களில் அதிகம் பேர் இந்த விருதுக்காக தங்கள் பெயரை தாக்கல் செய்ததில்லை.
பிரதமர் மோடி கடந்த 2014 ஆம் ஆண்டு இந்திய பிரதமராக பொறுப்பேற்றார். அந்த ஆண்டில் இந்த விருதுகளுக்காக விண்ணப்பித்தோர் எண்ணிக்கை 2,200. ஆனால் இந்த ஆண்டு 50 ஆயிரம் பேர்வரை விண்ணப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விண்ணப்பங்களில் இருந்து 112 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்த தேர்வு முறைகளில் ஏராளமான வித்தியாசங்கள் இருந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர். முன்பெல்லாம்  மருத்துவத்துறைக்கு ஆண்டுதோறும் தரப்படும் விருதுகளில் மிகப்பெரிய மருத்துவக்கழகங்களில் பணிபுரியும் பெரிய நிபுணர்களுக்கே வழங்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு மருத்துவத்துறைக்கு வழங்கப்பட்ட 14 விருதுகளில் மக்களுக்கு சேவை மனப்பான்மையுடன் அர்பணிப்புடன் பணியாற்றிய மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக மிக குறைந்த பணத்தை நோயாளிகளிடம் பெற்றுக்கொண்டு நல்ல முறையில் மருத்துவ சேவை செய்த ஒமேசு குமார் பாரதி, மலைவாழ் மக்களுக்கு 5 ரூபாயில் சிகிச்சை அளித்த சூடம் கேத்தே , தமிழகத்தை சேர்ந்த தர்ம சிந்தனை மருத்துவர் ராமசாமி வேங்கட சாமி, பிரதாப் சிங் கரடியா போன்ற டாக்டர்களின் சேவை மனப்பான்மைக்காகவே விருதுகள் வழங்கப்பட்டது.

இவை எல்லாவற்றையும் விட இந்த ஆண்டு பிரதமர் மோடி சர்க்கார் செய்த புதுமை என்னவென்றால் விவசாயத்துறைக்கு மட்டும் 15 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 12 விருதுகள் விவசாயத்தில் நேரடியாக ஈடுபடும் விவசாயிகளுக்கே வழங்கப்பட்டுள்ளது. தோட்டக் கலைத்துறையில் கனவால் சிங் சவுகான், வல்லபாய் வஸ்ரம்பாய் மரவானியா , ஜகதீஷ் பிரசாத் பரேக் இவர்கள் செய்த தொழில் நுட்ப பணிகளை பாராட்டி  3 விருதுகளும், சுற்றுச் சூழலுக்கு ஏற்ப நவீன தொழில் நுட்பங்களையும், இயற்கை உரத்தையும்  பயன் படுத்தி விவசாயத்தில் உற்பத்தியை அதிகப்படுத்திய விவசாயிகளுக்கு இந்த ஆண்டு 12 விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. தியாகி பரத்பூஷன், ராம் ஷரன் வர்மா, யட்லபள்ளி வேங்கடேச்வரராவ், பாரம்பரிய விதைகளை பயன்படுத்திய கமலா பூசாரி, கிஸ்சான் சாட்சி ராஜ்குமாரி தேவி ,  பாபுலால் தையா, ஹுக்கூம் சந்த் படிதார் ஆகிய விவசாயிகளுக்கு விருது அளிக்கப்பட்டது. இந்திய வரலாற்றிலேயே முதன் முதலாக விவசாயிகளுக்கு பதம விருதுகள்  அளிக்கப்படுவது இப்போதுதான் எனவும், விருதுகள் அனைத்து தரப்பு மக்களையும் சென்று அடைய வேண்டும் என்ற பரந்த கண்ணோட்டத்துடன் மத்திய அரசு வழங்கியதாக அரசு அதிகாரிகளும், ஊடகத்துறையை சேர்ந்தவர்களும் குறிப்பிட்டுள்ளனர்.

அதே போல முந்தைய காங்கிரஸ் அரசால் பழிவாங்கப்பட்டு அரசுக்கு எதிரானவர் என்றும், இந்திய உளவாளி என்றும் பொய் முத்திரை குத்தப்பட்டு அவமானப்படுத்தப் பட்டவர் விண்வெளி விஞ்ஞானி எஸ். நம்பிநாராயணன். இவர் நிரபராதி என்று உச்ச நீதிமன்றத்தில் நிரூபணமானார். அவருக்கு நஷ்ட ஈடாக ₹50 இலட்சத்தையும் சுப்ரீம் கோர்ட் பெற்றுத்தந்தது. அவருக்கும் இந்த ஆண்டு பத்ம விருது அளிக்கப்பட்டது கேரள மக்களிடம் மகிழ்ச்சியை உருவாக்கியுள்ளது. இதேபோல ஒவ்வொரு துறையிலும் மக்களுக்கு நேரடி சேவை புரிந்தவர்களுக்கு மட்டுமே விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும்,  சுதந்திரம் அடைந்த பிறகு 70 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போதுதான் அரசு விருதுகள் மக்கள் விருதுகளாக மாறியுள்ளது என்றும் டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகையில் பார்தி ஜெயின் என்கிற பிரபல கட்டுரையாளர் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

Tags
Show More
Back to top button
Close
Close