ஊடக பொய்கள்

போலியோ சொட்டு மருந்து தட்டுப்பாடு, நிறுத்தம் என போலி செய்தியை வெளியிட்ட பிரதான ஊடகங்கள் : உண்மை நிலை என்ன ?

போலியோ தடுப்பு சொட்டு மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக நாடு முழுவதும் சில ஊடகங்கள் போலி செய்தியை கட்டவிழ்த்து விட்டு வருகின்றன.

தி பிரிண்ட் என்ற ஆங்கில பத்திரிக்கை வெளியிட்ட செய்தியில், இந்தியாவில் போலியோ சொட்டு மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தது.

Screenshot taken from The Print’s article
Screenshot taken from The Print’s article

இதனை தமிழக ஊடகங்கள் சிலவும் இந்த போலி செய்தியை கையிலெடுத்தன. போலியோ சொட்டு மருந்து தட்டுப்பாடு, சொட்டு மருந்து நிறுத்தம் என்று போலி செய்திகள் வெளியாயின.

Screenshot taken from Puthiyathalaimurai’s article
Screenshot taken from Dinakaran’s article

குஜராத் காங்கிரஸ் கட்சியியை சேர்ந்த அஹ்மத் படேல் இந்த போலி செய்தியை ட்விட்டரில் பதிவிட்டார்.

குஜராத் MLA ஜிக்னேஷ் மேவானி, இந்த போலி செய்தியை ட்வீட் செய்தார்.

பிரதமர் மோடி,  மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவிற்கு வருகை தரும் சமயத்தில் சரியாக இந்த போலி செய்திகள், தமிழக ஊடகங்களில் வெளியாயின. இதனால் இந்த செய்திகள் Go Back Modi ட்ரெண்டிங்கிற்கு பயன்படுத்தப்பட்டன.

மோடி எதிர்ப்பு “பத்திரிக்கையாளராக” கருதப்படும் சவுக்கு சங்கரும் பிரதமர் மோடியை தூற்றியும் இந்த போலி செய்தியை பரப்பும் வகையிலும், Go Back Modi என்ற ஹேஷ்டேகில் மீம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

பிறகு என்ன ? கேட்கவா வேண்டும்? இந்த போலி செய்தி சமூக வலைத்தளங்களில் மிக அதிக அளவில் பரப்பப்பட்டன. பெரியாரிஸ்டுகள், தி.மு.க ஆதரவாளர்கள், திருமுருகன் காந்தி, சீமான் ஆதரவாளர்கள் என அனைவரும் இந்த போலி செய்தியை சமூக வலைத்தளங்களில் பரப்பினர்.

இந்த போலி செய்திகளை சுக்குநூறாக்கும் வகையில் மத்திய சுகாதார துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. போலியோ சொட்டு மருந்து தட்டுப்பாடோ நிறுத்தமோ இல்லை என்று விளக்கம் அளித்துள்ளது.

OPV மற்றும் IPV ஆகிய இரு வகையான மருந்துகளுக்கு எந்த தட்டுப்பாடும் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளது.

 

Statement by Health Ministry

மத்திய சுகாதார்த்துறையின் இந்த விளக்கத்திற்கு பிறகும் போலி செய்தி வெளியிட்டதற்காக வருத்தமோ அல்லது விளக்கமோ அல்லது மறுப்பு செய்தியோ தமிழகத்தின் எந்த ஊடகமும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Featured Image Courtesy : OpIndia

Tags
Show More
Back to top button
Close
Close