பிஷப்புக்கு எதிராக போராட்டம் நடத்திய கன்னியாஸ்திரிகள் ஒட்டுமொத்தமாக இடமாற்றம் செய்யப்பட்டது கடும் எதிர்ப்பை சந்தித்துள்ள நிலையில் கேரளத்தின் முக்கிய கலை இலக்கியத்துறை பிரமுகர்கள் முதல்வர் பினராயி விஜயன் தலையிடக்கோரி கடிதம் எழுதியுள்ளனர். இந்த இடம் மாறுதல்களுக்கு பின்னணியில் பிஷப் பிராங்கோ முலக்கல் உள்ளதாகவும் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

பிராங்கோ முலக்கல்லுக்கு செல்வாக்குள்ள பஞ்சாப் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இவர்கள் இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. பிராங்கோ முலக்கல் மீதான பாலியல் வழக்கை திசைதிருப்ப இந்த இடமாற்றம் உதவும். இடமாற்றத்தோடு தொடர்புள்ள மதர் ஜெனரல்கடிதம் எழுதவும் பிராங்கோவின் தலையீடு உள்ளதாககடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாஸ்த்திரிகள் குரவிலங்காட்டில் வசிக்க முதல்வர் உதவ வேண்டும் எனவும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. கவிஞர் சச்சிதானந்தன், நாவலாசிரியர் ஆனந்த், டி.டி.ஸ்ரீகுமார், கவித கிருஷ்ணன் உள்ளிட்ட 55 பேர் இந்த கடிதத்தை முதல்வருக்கு அனுப்பியுள்ளனர். அடுத்த மாதம் இதுகுறித்து ஒரு மாநாடு நடத்தவும் கலை இலக்கியத்துறையினர் முடிவு செய்துள்ளனர்

Share