பொது தேர்வுகள் நெருங்கிவரும் நிலையில் மாணவர்களின் தேர்வு பயத்தை போக்கும் வகையில், அவர்களுக்கு தன்னம்பிக்கை தரும் வகையில் பிரதமர் மோடி இன்று டெல்லி டாக்கடோரா ஸ்டேடியத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் 2000 பள்ளி மாணவர்களிடையே பேசினார்.  அப்போது குழந்தைகள் மட்டுமன்றி பெற்றோருக்கும் சில ஆலோசனைகள் கூறினார். அப்போது அவர் பேசுகையில், “நாட்டின் இளைய சக்தி சூழ நான் உரையாற்றுவது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. மாணவர்கள் தேர்வுக்காக மட்டும் படிக்கக்கூடாது. நமது கல்விமுறை மாணவர்களின் வாழ்வை வளமாக்குவதாக இருக்க வேண்டும். வாழ்க்கைச் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் மாணவர்களின் வாழ்வு அமைய வேண்டும்.

மாணவர்கள் தங்களது பெற்றோர்களுடன் அதிக நேரம் பகிர வேண்டும். இதற்குப் பெற்றோரும் ஒத்துழைக்க வேண்டும். உங்கள் குழந்தைகளிடம் உங்கள் அளவுக்கு மன முதிர்ச்சியை எதிர்பார்க்காதீர்கள். குழந்தைகள் மன வருத்தத்துடன் இருந்தால் அவர்களிடம் உட்கார்ந்து பேசுங்கள். மன அழுத்தம் அதிகமாக இருந்தால் நல்ல கவுன்சிலிங் எடுக்கத் தயங்காதீர்கள். உங்கள் குழந்தைகளை மற்றக் குழந்தைகளுடன் ஒருநாளும் ஒப்பிடாதீர்கள். மாணவர்கள் எப்போதும் தேர்வுகளைக் கற்றலுக்கான வாப்பாக மட்டுமே பார்க்க வேண்டும். உங்களது குறிக்கோள் பெரிதானதாக இருக்க வேண்டும். சின்னக் குறிக்கோள்கள் வைத்து அதில் வெற்றி பெற்று உங்களது பெரிய கனவுகளை நிறைவேற்ற வேண்டும்” என மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசினார்.

Share