சென்னை அயனாவரத்தை சேர்ந்த பாஸ்கர் என்பவர், தி.மு.க-வின் வட்டச் செயலாளராக உள்ளார். ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ள அவரின் அலுவலகத்தை, கடந்த 3 நாட்களுக்கு முன்பு, அப்பகுதியை சேர்ந்த சசிக்குமார், மணிகண்டன் ஆகியோர் தாக்கியதை அடுத்து, இருவரையும் போலீஸார் கைது செய்தனர் என்று தந்தி செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.

விசாரணையில், சசிகுமார் வாங்கிய ஒரு லட்சம் ரூபாய் கடனுக்கு பாஸ்கர் அதிக வட்டி கேட்டதை அடுத்து, இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து பாஸ்கரின் அலுவலகத்தை சசிகுமார், மணிகண்டன் ஆகியோர் தாக்கியதும் தெரியவந்தது. இதையடுத்து, கந்துவட்டி புகாரில் பாஸ்கரை காவல்துறை கைது செய்தனர் என்று அந்த செய்தி குறிப்பு மேலும் தெரிவிக்கிறது.

Picture Courtesy : Thanthi TV

Share