Featured Image Credits - www.opindia.com

கடந்த சில ஆண்டுகளாக கடும் சிரத்தையுடன் மோடி அரசாங்கத்திற்கு எதிராக முதன்மை செய்தி நிறுவனங்கள் சமூக வலைதளங்களில் இருந்து தகவல்களை திரட்டி போலி செய்திகளை உருவாக்கி வருகின்றனர். அந்த வகையில், ஊடக உலகின் ஜாம்பவான் என்று கூறப்படும் இந்து நாளிதழின் ஆசிரியர் என்.ராம் ஒரு கட்டுரையை சமீபத்தில் வெளியிட்டது இன்றைய ஊடகங்கள் மீதான நம்பகத்தன்மையின் மீது கேள்வி எழுப்பியுள்ளது.

“மோடியின் முடிவால் 36 ரபேல் போர் விமானங்கள் ஒவ்வொன்றின் விலையும் 41 சதவீதம் அதிகரிப்பு” என்று கட்டம் கட்டி என்.ராம் எழுதிய ஆங்கில தமிழ் கட்டுரையை அவரது குடும்ப இதழான ‘இந்து தமிழ்திசை’ தமிழிலும் வெளியிட்டுள்ளது. உண்மை என்னவென்றால், அந்தக் கட்டுரையின் அடிப்படையே அபத்தமானது, அதிலுள்ள ஒப்பீடுகளும் கணக்குகளும் முற்றிலும் தவறானவை என்பது ஆங்கிலத்தில் நிபுணர்களால் உடனே சுட்டிக் காட்டப்பட்டு அந்தக் கட்டுரை கிழிந்து தொங்கவிடப்பட்டுக் கொண்டிருக்கிறது.

உதாரணமாக, பாதுகாப்புத் துறை நிபுணர் அபிஜித் ஐயர்-மித்ரா இந்த 4-நிமிட வீடியோவில் என்.ராமின் வாதங்களை நொறுக்குகிறார்:

No, N. Ram, you are wrong on Rafale: Abhijit Iyer-Mitra’s rebuttal to The Hindu – https://www.mynation.com/…/no-n-ram-you-are-wrong-on-rafale…

என்.ராம் பச்சையாகப் புளுகுகிறார் என்று ரோஹித் வத்ஸ், ஆதாரபூர்வமாக எழுதுகிறார்:

N Ram is lying in his The Hindu article about the Rafale Deal, here’s how – https://www.opindia.com/…/n-ram-is-lying-in-his-the-hindu-…/

இந்தக் கிழிசலைத் தான் “தேடியெடுத்தேன் திருவாழி மோதிரத்தை” என்று தமிழிலும் போட்டு கொண்டிருக்கிறது தி இந்து. இதை வைத்து, தமிழ்நாட்டில் மோடிக்கு எதிராக போலி தகவல்களை பரப்புபவர்கள் ஓலமிட ஆரம்பித்து விட்டார்கள்.

செய்தி குழுமத்தின் முதலாளிகளே மீண்டும் செய்தி ஆசிரியர் பணிக்கு வந்ததிலிருந்து இந்த கேள்விக்கான பதிலை நாம் தெரிந்துக் கொள்ளலாம். முன்னதாக தி இந்து குழுமத்தில் இருந்த நல்ல தொழில்முறை தலைமை செயல் அதிகாரியையும் அவர்கள் மாற்றியதிலிருந்து அவர்களின் முழு எண்ணத்தையும் புரிந்துகொள்ளலாம்.

சில நேரங்களில் செய்தி குறித்து ஆசிரியர்கள் எடுத்த முடிவுகள் தவறாக முடிந்திருக்கலாம். ராம் அவர்களும் ரவி அவர்களும் ஆசிரியர்களாக இருந்த காலத்திலும் பல தவறுகள் நிகழ்ந்துள்ளது. செய்தி வழங்கியதில் தவறு இருக்கும் பட்சத்தில் அதை சுட்டிக்காட்டலாம். ஆனால் இந்த செய்திதாளை மேன்மை படுத்த (Professionals) வேண்டும் என்ற எண்ணம் கூட இல்லாமல் செய்திகள் அவர்களாலே வெளியிடப்படுகிறது.

உண்மையில் கடந்த 20 மாதங்களில், தி இந்து நாளிதழ் முன்பைவிட புதிய வடிவத்திலும், அனைவரும் படிக்கும் வகையிலும், உள்ளுர் செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாகவும், தொடர்ச்சியாக பல முக்கிய செய்திகளையும், புலனாய்வு செய்திகளையும் மற்ற ஊடகங்கள் தொடுவதற்கு அஞ்சும் பெரும் நிறுவனங்களுக்கு எதிரான செய்திகளையும் வெளியிட்டு வந்துள்ளது.

கொஞ்சமும் அறிவில்லாமல் மற்ற ஊடகங்கள் எவ்வாறு நரேந்திர மோடி குறித்தும் பாகிஸ்தான் குறித்தும் செய்தி வெளியிட்டு வருகின்றனவோ அவற்றை போல் இந்துவும் ஊதுகுழல் ஊதும் வேலையில் இறங்கியது ஊடக தர்மத்தின் மீது சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இரண்டு மணி நேரம் பாராளுமன்றத்தில் தெளிவான விளக்கம் கொடுத்ததும், உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும் கேட்கமால், இந்த விவகாரத்தை மேலும் மேலும் பெரிதாக்கி, பிரச்சனை இருந்தால் தான் அரசியல் என்கிற சில தமிழக அரசியல் கட்சிகளின் கொள்கையை போலவே, தி இந்து போன்ற ஊடகமும், வழிய வந்து பிரச்சனையை உருவாக்கி அதில்ஆதாயம் தேட முயற்சிப்பதை போன்ற தோற்றம் தென்படுகிறது. நாட்டின் பாதுகாப்பு இரகசியம் தொடர்பான ஒரு விடயத்தில ஊடகங்கள் வெளிப்படை தன்மையை எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்? அமெரிக்க ஊடகங்கள் பெண்டகன் ரகசியத்தைஅறிய முடியுமா? அது போல தானே இந்திய இராணுவ இரகசியமும். அதனை ஊடகங்கள் வெளி கொண்டு வர முயல்வது ஏன்? நாட்டின் பாதுகாப்பை கேள்விகுறியாக்கவா? களங்கப்பட்டு நிற்கிறது தி இந்துவும், ராமின் செயல்பாடுகளும்.

Share