தமிழ் நாடு

போராட்டம் அறிவித்த பா.ஜ.க இளைஞரணி மற்றும் ஹிந்து அமைப்புகள், மண்டியிட்ட லயோலா கல்லூரி

ஓவிய கண்காட்சி என்ற பெயரில் ஹிந்துக்களின் மத உணர்வை புண்படுத்தும் வகையிலும் பாரத மாதாவை இழிவு படுத்தும் வகையிலும் உள்ள ஓவியங்கள், சென்னை லயோலா கல்லூரியில் இடம் பெற்றது. இதையடுத்து இந்த ஓவியங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பல தலைவர்களும், ஹிந்து அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்த வண்ணம் இருந்தனர்.

இந்த சம்பவத்தை கண்டித்து பாரதிய ஜனதா இளைஞரணி சார்பாக வருகின்ற 23-ஆம் தேதி லயோலா கல்லூரி முற்றுகை போராட்டத்தை அறிவித்து களத்தில் குதித்தது. இது குறித்து தமிழக பா.ஜ.க இளைஞரணி தலைவர் வினோஜ் செல்வம் காட்டமான அறிக்கையை வெளியிட்டு இருந்தார்.

இதைத்தொடர்ந்து லயோலா கல்லூரி தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பா.ஜ.க இளைஞரணி தலைவர் வினோஜ் செல்வம் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு:

நரிகள் கிறித்துவப்போர்வையில் பரிகளாகி, இந்துமதத்தையும், பாரதத்தாயையும், பிரதமரையும் தங்களது கீழ்த்தரமான பாணியில் மறுபடி அவமானப்படுத்த முயற்சி. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க காவல்துறையும் நடுநிலையாளர்களும் முன்வர வேண்டும்.

மாற்று மதத்தவர்களை இழிவு படுத்துவது இவர்களுக்கு வாடிக்கையாவதை தடுத்து நிறுத்
துவோம். மனிதம் மதத்தை விட புனிதம் என்று இந்த ஈனப்பிறவிகளுக்கு உணர்த்துவோம் .

லயோலா கல்லுரியா கம்யூனிஸ்ட் அலுவலகமா….

இரண்டு நாட்களுக்கு முன் லயோலா கல்லுரியில் நடந்த மாணவர் புகைப்பட கண்காட்சியில் இந்து மதத்தையும் பாரதத் தாயையையும் கொச்சைபடுத்தும் விதமாக நடந்து கொண்ட லயோலா கல்லுரி நிர்வாகத்திற்கு இந்து மத உரிமையையும் பாரதத் தாயையும் சீண்ட என்ன உரிமை இருக்கிறது…

கல்லுரி என்பது மத சாதி பாகுபாடு இல்லாமல் மாணவர்களை இந்த சமுகத்திற்கு உருவாக்க வேண்டிய கடமை உள்ள கோவில்..

அதில் நகரத்து நக்சல்பாரிகளோடு கல்லுரி நிர்வாகம் கைகோர்த்து கொண்டு பெருபாண்மை இந்து மதத்திற்கும் பா.ஜ.க வையும் மட்டும் கொச்சைபடுத்தும் விதமாக நடந்து கொள்ளும் கிறிஸ்துவ கல்லுரியை
மதசார்பற்ற சமுக நல்லிணக்க கொள்கைக்கு முரணாக அமைகிறது …

இதை எதிர்த்து எந்த போலி சமுக நல்லிணக்கம் பேசும் போராளியும் குரல் கொடுக்க வில்லை …. சிறிய கண்டணம் கூட பதிவு செய்யாதது இவர்கள் அனைவரும் இந்து மதத்திற்கும் இந்தியாவிற்கும் எதிரானவர்கள் என்பது புரிகிறது…

மேற்கு வங்காளம் போய் வராத வங்காள மொழியில் மதசார்பின்மை பேசும் முக.ஸ்டாலின் அவர்களுக்கு தன் வீட்டின் பின் பக்கத்தில் இருக்கும் லயோலா வில் இந்து மதத்தை கொச்சைபடுத்துவது கண்ணில் தெரியவில்லையா இல்லை யாரும் எழுதி கொடுக்கவில்லையா?

கிறிஸ்துவ சோனியா வின் கைகூலி தமிழக காங்கிரஸ் தலைவர் S.திருநாவுக்கரசரிடம் இந்து மதத்திற்கு ஆதரவாக குரலை எதிர்பார்ப்பது முட்டாள் தனம் என்பது தெரியும்.

ஆனால் சமுக நல்லினக்குத் திற்கு எதிராக முதல் குரலை பதிவு செய்யும் மருத்துவர் ராமதாஸ் அவர்களின் மவுனம் ஏன்?

கிறிஸ்துவ மதத்தின் கைகூலி வைகோவின் அமைதியில் நியாயம் இருக்கிறது.. ஆனால்

பதவிக்காக கோயில் கோயிலாக சுற்றி வரும் தினகரன் இந்த மத வெறிக்கு எதிராக கண்டனம் கூட பதிவு செய்யாத இந்த இந்து மதத் துரோகம் ஏற்று கொள்ள முடியாது.

இவர்கள் எல்லாம் எதை சமுக நல்லினக்கம் என்று பறைசாற்றுகிறார்கள்?

ஒரு வேளை இந்து மத எதிர்ப்பு மட்டும் தான் இவர்களின் சமுக நல்லினக்கமோ ?

இவர்களை போன்ற வாக்கு வங்கி அரசியல் வாதிகளை தமிழக இந்து மக்களே அடையாளம் கண்டுகொள்ளுங்கள்.

இது போன்ற மத துவஷேத்தில் ஈடுபடும் இந்த கல்லூரியில் பயிலும் இந்து மாணவர்களின் நிலை என்ன ..

கல்லுரியில் அரசியல் பேசக்கூடாது என்று சட்டம் இருந்தும் சட்டத்தை மீறிய லயோலா கல்லுரி மீது உடனடி நடவடிக்கை எடுக்க கோரியும் இந்து மக்களிடம் மன்னிப்பு கேட்க கோரியும் .

வருகிற 23 ம் தேதி லயோலா கல்லுரி முற்றுகை போராட்டம் பாரதிய ஜனதா இளைஞரணி சார்பாக நடைபெற இருக்கிறது .

Tags
Show More
Back to top button
Close
Close