Amazon Great Indian Sale - 2019

தூத்துக்குடி மாவட்டத்தில் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் பொருட்டு தமிழக அரசு நிறுவனமான சென்னை தொழில் முனைவோர் மேம்பாட்டு மையத்துடன் இணைந்து தொழில் முனைவோரை உருவாக்கும் பயிற்சியை ஜனவரி 29-ம் தேதி முதல் துடிசியா நடத்த உள்ளது.

இரண்டு வாரங்கள் நடைபெறும் இப்பயிற்சியில் தொழிலை தேர்ந்தெடுக்கும் முறைகள், திட்ட அறிக்கை தயாரித்தல், அரசு மானியத்துடன் கூடிய கடன் பெறும் வழிமுறைகள், வங்கியின் எதிர்பார்ப்புகள், தேவையான அரசு பதிவுகள், மார்க்கெட் சர்வே, தொழிற்சாலை மின் இணைப்பு பெறும்முறைகள், கணக்கு எழுதும் முறைகள், தலைமைப் பண்புகள், இலக்கு நிர்ணயித்தல், நிதி நிர்வாகம், வர்த்தக கணக்கு எழுதும் முறை, மத்திய – மாநில அரசுகளின் மானியங்கள், காப்பீடுமுறைகள், தொழிற்சாலைகளை நேரடியாக பார்வையிட அழைத்துச் செல்லுதல், வெற்றி பெற்ற தொழிலதிபர்களிடம் நேரடியாக கலந்துரையாடல் போன்றவை நடத்தப்பட உள்ளன.

Advertisement Amazon Great Indian Sale - 2019

பயிற்சியின் முடிவில் தமிழக அரசு பயிற்சி சான்றிதழ் வழங்குகிறது. புதிதாக தொழில் துவங்க விரும்புவோருக்கு அரசு வழிகாட்டுதலின்படி ₹5 கோடி ரூபாய் வரை மானிய கடன் பெற்று தொழில் துவங்கலாம். எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18-45 வயதிற்குட்பட்ட தொழில் துவங்க ஆர்வமுள்ள ஆண், பெண் இருபாலாரும் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். பயனாளிகள் தூத்துக்குடி அல்லது வெளி மாவட்டத்தைசேர்ந்தவர்களாக இருக்கலாம்.

விண்ணப்பத்துடன் புகைப்படம் மற்றும் ஆதார் நகல் இணைக்கப்பட வேண்டும். இலவச விண்ணப்பம் மற்றும் ஆலோசனைகள் பெற:

துடிசியா 4/158 எட்டயபுரம் ரோடு, ராம் நகரில் உள்ள துடிசியா அலுவலகத்தை நேரிலோ தொலைபேசியிலோ தொடர்பு கொள்ளலாம்.

தொலைபேசி எண் 0461-2347005, 9840158943.

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் ஜனவரி 24.

பயிற்சி கட்டணம் ₹5,000 மட்டுமே என துடிசியா பொது செயலாளர் ராஜ்செல்வின் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Share