நாடாளுமன்ற தேர்தல் தேதி மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக் காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைகிறது. இதையடுத்து நடாளுமன்றத்துக்கு தேர்தல் நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. இது தொடர்பாக கடந்த வாரம் மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியது. இந்த நிலையில் மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் தேதி வெளியாகும் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேர்தலுக்கான ஏற்பாடுகளை விரைந்து செய்யுமாறு மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Share