வரலாற்று சிறப்புமிக்க 10% பொதுப்பிரிவிலுள்ள ஏழைகளுக்கான இட ஒதுக்கீட்டை அமல்படுத்தியது மோடி அரசு. இதைத்தொடர்ந்து குஜராத் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்கள் இந்த இட ஒதுக்கீட்டை சட்டபூர்வமாக்கியது. மற்ற மாநிலங்களும் விரைவில் இந்த இட ஒதுக்கீட்டை அமல்படுத்த இருக்கிறது.

இந்நிலையில் இந்த 10% ஏழைகளுக்கான இட ஒதுக்கீட்டை எதிர்த்து தி.மு.க சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

மத்திய அரசு கடந்த பாராளுமன்ற கூட்டத்தில் 10% இட ஒதுக்கீட்டை பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழைகளும் பலன்பெறும் வகையில் சட்டத்தைக் கொண்டு வந்தது. காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் மற்றும் பெரும்பாலான எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் இச்சட்டம் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

தி.மு.க-வின் இந்த பொதுப்பிரிவு ஏழை விரோத போக்கு, பொதுப்பிரிவில் உள்ள சமூகத்தின் வாக்கு பெருமளவு தாக்கத்தை தமிழக அரசியலில் தங்கள் வெற்றியைப் பாதிக்காது என்று கருதுவதால் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறுகின்றனர்.

Share