இந்தியா

தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் அதிகாரிகளை உடனடியாக மாற்றுங்கள் , மாநிலங்களுக்கு தேர்தல் கமிஷன் அதிரடி உத்தரவு !

வரும் நாடாளுமன்றம் மற்றும் 4 மாநில சட்டசபை தேர்தலை முன்னிட்டு தொடர்ந்து 3 ஆண்டுகளாக பணியாற்றும் அரசு அதிகாரிகளை இடம் மாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது குறித்து அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த தலைமை செயலாளர்களுக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் கூறி இருப்பதாவது: விரைவில் பார்லி மற்றும் ஆந்திரா, ஒடிசா,அருணாச்சல பிரதேசம், சிக்கிம், 4 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை அடுத்து ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வரும் அரசு அதிகாரிகளை இடம் மாற்றம் செய்ய வேண்டும். சொந்த ஊரில் பணிபுரிபவர்களையும் மாற்ற வேண்டும். இவ்வாறு தேர்தல்ஆணையத்தின் உத்தரவில் கூறப்பட்டு உள்ளது. தேர்தல் கமிஷனின் இந்த அதிரடி உத்தரவு அதிகாரிகளுக்கிடையே பரபரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags
Show More
Back to top button
Close
Close