Amazon Great Indian Sale - 2019

உலகில் அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட வாழ்க்கை நெறி நூல் என்ற பெருமை திருக்குறளுக்கு மட்டுமே உண்டு. இதனை படைத்த வள்ளுவன் எப்படி இருந்திருப்பார் என்ற சிந்தனை அனைவர் மத்தியில் எழுந்து கொண்டிருந்தது. இதற்கு முன் அனைவரும் வள்ளுவன் முகம் அறியாமலேயே குறள்களை படித்து வந்தனர். இந்த நிலையில் 1959-ம் ஆண்டு தனது ஒட்டுமொத்த சிந்தனையின் தூரிகையால் ஓவிய பெருந்தகை கே.ஆர் வேணுகோபால் ஷர்மா, திருவள்ளுவருக்கு முழு உருவம் கொடுத்தார். மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஓவியமாக அறிவித்து 60 ஆண்டுகள் ஆகிறது. உலக பொதுமறைகளில் ஒன்றான திருக்குறள் அன்றும், இன்றும், என்றும் பெருமையுடன் திகழ்ந்து வருகிறது. ஆயிரத்து 330 திருக்குறள்களை படைத்த வள்ளுவன் எப்படி இருந்திருப்பார் என்ற சிந்தனை, அந்த நாட்களில் பலருக்கும் எழுந்தது.

தங்களின் சிந்தனைக்கு எட்டிய வகையில் பலரும் வள்ளுவருக்கு உருவம் கொடுத்தனர்.ஒருவர் பட்டைப் போட்டு பார்த்தார், மற்றொருவர் மொட்டை போட்டு பார்த்தார். சிலர் சமயங்களுக்கும், மதங்களுக்கும் வள்ளுவரை சொந்தம் கொண்டாடினர். ஆனால், திருவள்ளுவர் தனது படைப்பில் எங்குமே இதனை கொண்டாடியதில்லை. உலகப் பொதுமறை தந்தவரின் உருவம் உலகளாவிய பொது உருவமாகத்தானே இருக்க முடியும் என்ற சமதர்ம நோக்கில் சிந்தித்த ஓவிய பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் ஷர்மா. ஒரு பொதுவான புறதோற்றத்தை வடிவமைக்க முடிவு செய்தார். 40 ஆண்டுகள் தொடர்ந்து வள்ளுவர் திருவுருவம் குறித்த சிந்தனை ஓட்டத்தில் அவர் இருந்தார்.

Advertisement Amazon Great Indian Sale - 2019

தனது வாழ்வை மைசூர் சமஸ்தானத்து கலைஞராக துவக்கிய அவர், நேரம் கிடைத்த போதெல்லாம் வள்ளுவரை வரைந்து பார்த்தார். இந்திய சிந்தனையும், ஐரோப்பிய உபகரணங்களையும் கைகோத்துக்கொண்டு விலை உயர்ந்த தூரிக்கைகள், வர்ணங்கள் ஓவியக்கலைக்கு உதவும் நுண்ணிய உபகரணங்களைப் பயன்படுத்தி வள்ளுவருக்கு முழு உருவம் கொடுத்தார். அண்ணா, காமராஜ், ஜீவானந்தம், கக்கன் என பலரும் வேணுகோபால் ஷர்மா இல்லத்திற்கு சென்று திருவள்ளுவரை உருவத்தை கண்டு மெய்சிலிர்த்தனர்.

மத்திய, மாநில அரசால் திருவள்ளுவர் திருவுருவம் அங்கீகரிக்கப்பட்ட ஓவியமாக அறிவிக்கப்பட்டது. 1959-இல் வெளியிடப்பட்ட வள்ளுவர் உருவப்படமானது, 1964-ல் தமிழக சட்டசபையில் அன்றைய துணை ஜனாதிபதி ஜாகிர் உசேன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. 1967-ல் ஆட்சிப் பொறுப்பேற்ற மறைந்த முதலமைச்சர் அண்ணாதுரை திருவள்ளுவரின் உருவப்படத்தை அனைத்து அரசு அலுவலகங்களிலும் இடம்பெறச் செய்ய அரசாணை பிறப்பித்தார். 40 ஆண்டு காலமாக தனது சிந்தனையால் ஷர்மா வரைந்த வள்ளுவர் ஓவியம் 60 ஆண்டுகளை நெருங்கியுள்ள நிலையில்,மணி விழாவாக அறிவிக்க வேண்டும் என அவரது மகன் ஸ்ரீராம் ஷர்மா கோரிக்கை விடுத்துள்ளார்.

ஷர்மா வரைந்த ஓவியத்தில் அவர் மதங்கள் கடந்த கருத்துக்களை கூறியவர் என்பதற்காக அவருடைய திருநெற்றியில் எந்த விதமான மத சின்னங்களும் இல்லை(நாமமோ அல்லது திருநீரோ) என்றால் கூட அவரது குறள்களில் முற்பிறவி, பிற்பிறவி மற்றும் தர்ம அடிப்படையிலான சிந்தனைகள் குறித்த இந்து மத கருத்துக்களை அவர் கூறியதால், அவர் நமது இந்து மத குடும்பத்தில் பிறந்தவராகத்தான் இருக்க வேண்டும் என நம் தமிழ் மக்கள் உணர்ந்து அவருடைய உருவப் படத்தின் நெற்றியில் திருநீர் அணிவித்து மகிழ்ந்தனர். அதுமட்டுமல்லாமல் திருநீர் அணிந்த வள்ளுவன் படங்களை மட்டுமே உலக அளவில் அனைத்து தமிழர்களும் ஏற்றுக் கொண்டனர். திருநீறு பூசிய வள்ளுவன் படம் கொண்ட திருக்குறள் புத்தகம் இல்லாத வீடுகளே கிடையாது என்ற நிலை இன்றும் உள்ளது.

எதுவாயினும் 40 ஆண்டுகள் தனது சிந்தனையுடன் போராடி வரைந்துள்ள ஷர்மா வரைந்த ஓவியம்தான் பொருத்தமான ஒரு மூல காரணமாயிற்று என்பது குறிப்பிடத்தக்கது. வள்ளுவரின் உருவத்தை அற்புதமான சிலையாக வடித்து தமிழகத்திலிருந்து கொண்டு சென்று, உத்தரகாண்ட் மாநில கங்கை கரையோரம் அந்த சிலையை நிறுவி, சிலையை சுற்றி அழகிய பூங்காவை நிர்மாணம் செய்துள்ளார் அம்மாநிலத்தை சேர்ந்த அங்குள்ள முன்னாள் பா.ஜ.க எம்பி தருண் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது. கீழ் கண்ட 2 திருவள்ளுவர் சிலைகளில் ஓன்று தமிழக அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஷர்மா வரைந்தது. மற்றொன்று உலகத்தமிழர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட திருநீறு அணிந்த இலங்கை மாத்தளையில் உள்ள சிலை சமீபத்தில் கடந்த நிறுவப்பட்ட சிலையாகும்.

(Input Credits – News J)

Share